YouTurn

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பா? உண்மை என்ன?

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2019ல் பெரியார் சிலை அறந்தாங்கியில் உடைக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது நடந்தது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

"சூரம் சம் அரம்" மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. மேலும் வீடியோ, தந்தி டிவியில் வெளியிடப்பட்ட செய்தி என்பதையும் அறிய முடிகிறது. 


X Link | Archive Link


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2019ல் “தந்தி டிவி” யூடியூப் பக்கத்தில் பெரியார் சிலை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உடைக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட செய்தி இது. இந்த வீடியோவை, தற்போது நடைபெற்ற சம்பவம் போல் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 



மேலும் இது குறித்து விகடன் பக்கத்திலும் கடந்த 2019 ஏப்ரலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 



முடிவு: 


நம் தேடலில், அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு என்று கூறி பரவும் வீடியோ கடந்த 2019ல் நடைபெற்ற சம்பவம் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.