யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய பிரச்சார வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பின வண்டியை பறிமுதல் செய்த
காவல்துறை 👌 pic.twitter.com/sN5qSqkz1L
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு, தவெக தலைவர் விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய பிரச்சார வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது செய்தி ஊடகங்களில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தோம். ஆனால் எந்த செய்தியும் இது குறித்து வெளியிடப்படவில்லை.

மேலும் பரவி வரும் புகைப்படத்தின் கீழ் வலது ஓரத்தில் “Gemini” AI LOGO இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது. இது குறித்து “Gemini” தளத்தில் ஆய்வு செய்ததில், பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்தது.
முடிவு:
நம் தேடலில், விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.