யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட ஒரே தமிழக தலைவர் கேப்டன் “விஜயகாந்த்” மட்டுமே. போலித்தனம் இல்லாத நல்ல மனிதர்.
விரிவான விளக்கம்
சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் வந்ததையடுத்து, அவர் குறித்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் அவருடைய ஆதரவாளர்களால் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழகத் தலைவர் விஜயகாந்த் மட்டுமே என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அப்துல் காலம் அவர்களின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட ஒரே தமிழக தலைவர் கேப்டன் “விஜயகாந்த்” மட்டுமே…
போலித்தனம் இல்லாத நல்ல மனிதர்… pic.twitter.com/WKzkibL262
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் உண்மை தானா என்பது குறித்து ஆய்வு செய்ததில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டதை செய்தியின் மூலம் அறிய முடிந்தது.

மேலும் இதனை ‘தி இந்து’ ஊடகத்தில் வெளியிடபட்டிருந்த செய்தியின் மூலமும் அறிய முடிகிறது.
இது தவிர வைகோ, அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதையும் ‘Red Pix 24x7’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழகத் தலைவர் விஜயகாந்த் மட்டுமே என்று குறிப்பிட்டு பலரும் தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், “முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட ஒரே தமிழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே” என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.