யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 62% பேர் பட்டதாரிகள் என்றும், 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றும் THE INDIA EXPRESS-ன் EDEX புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பரவிய செய்தி
Education Qualification of elected Leaders of Ruling Party from Bihar
* Thangapandiyan R - No schooling
* M Subramanyam - No schooling
* Rajendran Thiru - No schooling
* Kovi Cheziyan - No schooling
* S Ambethkumar - No schooling
* Malaivelu - No schooling
* Nivetha Murugan - No schooling
* Murugesan Paramkudi - 5th
* K Selvaraj - 5th
* Karikeyan - 5th

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைவர்களின் கல்வித் தகுதி என்று ஒரு பட்டியல் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கோவி செழியன் ஆகியோர் பள்ளி படிப்பை தொடங்கவில்லை என்றும், சிலர் மிகவும் அடிப்படைக் கல்வி மட்டும் பெற்றுள்ளார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Education Qualification of elected Leaders of Ruling Party from Bihar
* Thangapandiyan R - No schooling
* M Subramanyam - No schooling
* Rajendran Thiru - No schooling
* Kovi Cheziyan - No schooling
* S Ambethkumar - No schooling
* Malaivelu - No schooling
* Nivetha…
உண்மை என்ன ?
பரவி வரும் இந்த பட்டியல் குறித்து myneta.info என்ற இணையத்தில், தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்களின் உறுதிமொழி ஆவணம் குறித்து தேடிப் பார்த்தோம். முதலில் அமைச்சர் கோவி செழியன் பள்ளிப்படிப்பை தொடங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்ததை குறித்து தேடி பார்த்தோம். அப்போது அவர் MA, BL, M.PHIL, P.HD உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதே போல் அமைச்சர் மா.சுப்ரமணியனும் பள்ளிப்படிப்பை தொடங்கவில்லை என்று குறிப்பிட்டுயிருந்தது. இது குறித்து தேடிய போதும், அவர் 1995ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைகழகத்தில் B.A பட்டமும், 1999ஆம் ஆண்டு பெங்களூரு பல்கலைகழகத்தில் LLB பட்டமும் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி 12ஆம் வகுப்பு முடித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து தேடிய போது, கரூர் அரசு கலைக்கல்லூரியில் B.Com படித்ததாகவும், பின்பு 1995ஆம் ஆண்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் சட்டமன்ற உறுப்பினரான ஏ. ஆர். ஆர். சீனிவாசன் 12ஆம் வகுப்பு மட்டும் முடிந்ததாக குறிப்பிட்டுயிருந்த நிலையில், அவர் விருதுநகரில் உள்ள VHNSN கல்லூரில் பட்டப்படிப்பை முடித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தேடிய போது, THE INDIA EXPRESS-ன் EDEX-ல் 14 மே 2021 அன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் குறித்த கட்டுரை ஒன்று கிடைத்து. அதில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 61.96% பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேலான கல்வி அளவு கொண்டவர்கள் என்றும், இது 2016 சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 62% பேர் பட்டதாரிகள் என்றும், 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவு :
தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைவர்களின் கல்வித் தகுதி என்று வெளியிடப்பட்டுள்ள பட்டியல் போலியானது.