YouTurn

ப. சுப்புராயன் மணி மண்டபம் பற்றி விஜய் பேசியது! உண்மை என்ன?

ப. சுப்புராயன் மணி மண்டபம் பற்றி விஜய் பேசியது! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாமக்கல் மாவட்டத்தில் சுப்புராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

பரவிய செய்தி

"தமிழ்நாட்டிற்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கிய சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் நாமக்கலைச் சேர்ந்த சுப்புராயன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, அதை செய்ததா?" - தவெக விஜய்


விரிவான விளக்கம்

வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் வெவ்வேறு ஊர்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய்.

 

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று நாமக்கலில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், ‘"தமிழ்நாட்டிற்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கிய சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் நாமக்கலைச் சேர்ந்த சுப்புராயன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. வாக்குறுதி நம்பர் 456! அதை திமுக நிறைவேற்றியதா?" - என்று பேசினார்.



உண்மை என்ன?

 

சுப்புராயன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுப்படுத்து குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘Tamil News Beat’ என்ற இணைய செய்தித்தளத்தில் இது குறித்து 2024ஆம் ஆகஸ்ட் மாதம் வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது.


 

அதில், ‘கடந்த 06/09/2021 அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சமூக நீதி கோட்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர். ப. சுப்புராயன் நினைவாக அரங்கம் ஒன்று அமைக்க ரூ. 2.50 கோடி ஒதுக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து, 10.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,  டாக்டர்.ப.சுப்பராயனுக்கு நாமக்கல் மாவட்டம்,  நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியில் நினைவு அரங்கம் அமைக்கும் பணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் என்பதும் தெரியவருகிறது.

 

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன் என்பவர்,  கட்டப்பட்டு வரும் நினைவு அரங்கத்தை பார்வையிட்டதாகவும் குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் அதனை கட்டி முடிக்க அறிவுறுத்தியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேலும், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் இது பற்றி கூறுகையில், ‘இந்த ப. சுப்புராயன் நினைவு அரங்கத்தின் பணி 90% நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு முதல்வரால் திறந்துவைக்கப்பட இருப்பதாகவும்’ தெரிவித்தார்.

 

இதிலிருந்து, ப. சுப்புராயனுக்கு நாமக்கல் மாவட்டத்தில் நினைவு அரங்கம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் இருப்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

டாக்டர்.ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் கட்ட திமுக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று தவெக தலைவர் விஜய் பேசிய தகவல் தவறானதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.