யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேலு நாச்சியார் படத்திற்கு மரியாதை செலுத்திய படத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி, அவரது உருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான்
ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா 😭 pic.twitter.com/QuUB6o8eiN
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தின் ஒரு இடத்தில் எடிட் செய்யப்பட்டது போன்று இருந்ததையடுத்து, தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இப்படம் பதிவிடப்பட்டுள்ளதா எனது குறித்துத் தேடினோம்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி ‘TVK Vijay’ என்ற எக்ஸ் பக்கத்தில் ‘புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக எந்த படமும் இல்லை.
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.
மேற்கொண்டு பரவக் கூடிய படம் குறித்துத் தேடியதில், ஜனவரி 3ம் தேதி வேலு நாச்சியாரின் பிறந்தநாளன்று பதிவிட்டிருந்த படத்தைக் காண முடிந்தது. அதில் வேலு நாச்சியாருக்குப் பதிலாக எம்.ஜி.ஆர். படம் இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச்… pic.twitter.com/iX7YKTM37Q
இவற்றிலிருந்து எம்.ஜி.ஆர். படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
எம்.ஜி.ஆர். படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாகப்பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. வேலு நாச்சியார் படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்று போலியாக எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
