YouTurn

திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைத்ததில்லையா? விஜய் சொல்லும் தவறான தகவல்!

திமுக தொடர்ந்து  இரண்டு முறை ஆட்சியமைத்ததில்லையா? விஜய் சொல்லும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

1967 மற்றும் 1971 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது.

பரவிய செய்தி

"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் திமுக தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சியமைத்ததில்லை" - தவெக தலைவர் விஜய்.


Link

விரிவான விளக்கம்

தஞ்சாவூரில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ”அடுத்தமுறையும் (2026 சட்டமன்றத் தேர்தலில்) திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிவருகிறார். வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்ததில்லை. கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது கூட இவ்வாறு தொடர்ந்து இரண்டாம் முறையாக திமுகவால் ஆட்சியமைக்க முடியவில்லை” என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.



உண்மை என்ன?


தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் திமுகவின் ஆட்சிக்காலம் குறித்து தேடினோம். ’தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை’-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலமைச்சர்களின் ஆட்சிக்காலம் குறித்த தகவல்களைக் காணமுடிந்தது.


image.png


அதன்படி, 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாதுரை முதல்வரானார். ஆனால், 1969ஆம் ஆண்டில் அவர் புற்றுநோய் காரணமாக அவர் இறந்துவிடவே, கலைஞர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் 1969 பிப்ரவரி முதல் 1971 ஜனவரி வரை முதல்வராக இருந்தார். 


அதன் பின்னர், 1971 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியமைத்தது. 1971 மார்ச் முதல் 1976 ஜனவரி வரை கலைஞர் முதல்வராக இருந்தார்.


இதிலிருந்து, 1967 மற்றும் 1971 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.


முடிவு:


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் திமுக தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சியமைத்ததில்லை என்று தவெக தலைவர் விஜய் தவறான தகவலை பேசியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க