YouTurn

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே விஜய் வழங்கியதாக பரவும் தவறான செய்தி!

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே விஜய் வழங்கியதாக பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகர் விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக தவறாக பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

என்ன @actorvijay இதெல்லாம்?!



Link


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூரில் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘“என்ன பெரிய பணம்? வேணும் என்கிற அளவுக்கு பாத்தாச்சு. அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்கணும் என்று அவசியமில்லை” என்று பேசினார்.


இந்நிலையில் பணம் பெரிய விஷயமில்லை என்று சொல்லும் விஜய், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது,  நிவாரண நிதிக்காக ரூ. 5 ஆயிரம் மட்டுமே அளித்தார் என்று பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன் உள்ளிட்டோரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இந்த கூற்றுக்கு ஆதாரமாக ஒரு செய்தித்தாளில் வெளியான செய்தியின் புகைப்படத்தையும் பரப்பிவருகிறார்கள்.



உண்மை என்ன?


இது குறித்து இணையத்தில் தேடியதில்,Business of Cinema’ என்ற இணையத்தளத்தில் 2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின் போது தமிழ் நடிகர்கள் நிவாரண நிதி வழங்கியது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. 


image.png


அதில் நடிகர் விஜய் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கியதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக மீட்புப் பணி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் தேடுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவைக் காணமுடிந்தது. அதில், சென்னை வெள்ளத்தில் நடிகர்கள் நிவாரண நிதி கொடுத்தது பற்றிய செய்தித் துண்டின் புகைப்படம் இருந்தது. அதில், ரஜினி ரூ. 10 லட்சமும், ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியும், விஜய் ரூ. 5 கோடியும் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செய்திப் புகைப்படத்தில் உள்ள ரூ. 5 கோடி என்பதை ரூ. 5 ஆயிரம் என்று Edit செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.


முடிவு:


2015ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிவாரண நிதியாக விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து  ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.