யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 20, 2025 அன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சாரத்தின்போது, விஜய் - த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் வந்ததாக NewsTamil 24x7 ஊடகம் நியூஸ் கார்ட் வெளியிட்டதாக இணையத்தில் பரவி வருகிறது.
அண்ணே நீ குசும்பு காரன் @TVKVijayHQ
#சனியின்_பயணம் pic.twitter.com/kUkDVL01xP
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து NewsTamil 24x7 ஊடகத்தின் ஆசிரியர் குழுவிடம் தொடர்புக்கொண்டு கேட்டப்போது, இது எங்களது பெயரில் பரப்பப்படும் போலியான செய்தி என்றும், இப்படியான நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதையும் உறுதிச் செய்தனர்.
இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து தேடியப் போது, NewsTamil 24x7 ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் “நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-விஜயகாந்த் புகைப்படத்துடன் தொண்டர்கள்!” என்று குறிப்பிட்டு செப்டம்பர் 20, 2025 அன்று ஒரு நியூஸ் கார்ட் வெளியாகியிருந்தது. அதில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தையே தவெக நாகை தொண்டர்கள் கையில் பிடித்துள்ளனர். இதை எடிட் செய்து, விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் உள்ளது போன்று வதந்தி பரப்புகின்றனர்.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், விஜய் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் கையில் பிடித்திருந்த புகைப்படத்தை, விஜய் – த்ரிஷா இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.