யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக, 13 நாள்கள் கழித்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது! 🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/BNc9tgBJLV
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிந்தது.
“TBG Plays” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ “GTA 5 வீடியோ கேமின் காட்சி“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் “TGA Plays” ன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே போன்று பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததையும் காண முடிகிறது.
இதன் மூலம் வீடியோ கேமின் காட்சிகளை, இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை தாக்கும் காட்சி என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது என்று குறிப்பிட்டு பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.