YouTurn

விஜயை சந்திக்க சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடனமாடியதாக பரவும் வீடியோ!

விஜயை சந்திக்க சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடனமாடியதாக பரவும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வருவது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோவாகும். இதனை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க மகாபலிபுரம் செல்லும் வழியில் நடனமாடியதாக தவறாக பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

வீட்டுல இருக்குற சின்ன குழந்தைங்க, அம்மா, அப்பா அண்ணன்,தம்பி, தங்கச்சி செத்து ஒரு மாசம்கூட ஆகல இவனுக குத்தாட்டம் போட்டு போயி விஜய பாக்க போறானுக 

என்ன ஜென்மம்டா நீங்கலாம்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்து, அவர்களை தனியார் ஆம்னி பேருந்து மூலம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் வரவழைத்து சந்தித்து பேசினார்.  

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்கும் ஆர்வத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடனமாடியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் உள்ள பேருந்தில் VKT என்றிருந்ததை பார்க்கமுடிந்தது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னைக்கு புறப்பட்ட செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Gallatta ஊடகத்தில் ”கரூர் சம்பவபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்திக்க பேருந்து மூலம் அழைத்து வரும் Vijay ” என்று குறிப்பிட்டு பேருந்துகள் நிற்கும் வீடியோ வெளியாகியாகிருந்தது. அதில் பேருந்துகளில் YBM Travels என்று குறிப்பிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. 


அதே போல் சமயம் ஊடகத்திலும், ”விஜய்யை சந்திக்க சென்னை புறப்பட்ட மக்கள் ..திடீரென தவெகவினர் செய்த பூஜை -கரூரில் பரபரப்பு!” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் இருக்கும் புகைப்படத்திலும் YBM Travels என்று குறிப்பிட்ட பேருந்தே இடம்பெற்றிருந்தது. 


இதையடுத்து பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது அக்டோபர் 24 அன்று, ditoholidays and vkt_transports ஆகிய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.  இதன் மூலம் பரவி வருவது இது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோ என்பது தெரியவந்தது.  


முடிவு: 

எனவே, நம் தேடலில் பரவி வருவது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோவாகும். இதனை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க மகாபலிபுரம் செல்லும் வழியில் நடனமாடியதாக தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க