யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேருந்துகளும், வேன்களும் வரிசையாக நின்று இருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இது பெரியார் மண் இல்லை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண் என்று குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர்.
இது பெரியார் மண் இல்லை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண்.
மதுரை 🚩🔥 pic.twitter.com/7zKl7lkkPa
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் keyframeகளை வைத்து தேடி பார்த்தோம். அப்போது mani_pennagaramm என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் மே 13 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் வன்னியர் சங்கம் மாநாடு 250 ஏக்கரில் நடைபெற்றதாகவும், அதில் ஏழு ஏக்கர் பிரம்மாண்ட முறையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து தேடி போது, பரவி வரும் வீடியோவை tag செய்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதில் இது பெரியார் மண்ணும் இல்லை, முத்துராமலிங்கம் மண்ணும் இல்லை என்றும், சித்திரை முழுநிலவு மாநாட்டின் போது நான் எடுத்த வீடியோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பெரியார் மண்ணும் இல்லை... முத்துராமலிங்கம் மண்ணும் இல்லை...
எங்கள் சித்திரை முழுநிலவு “வன்னிய இளைஞர் பெருவிழா” மாநாட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ! 🔥💥
(கீழ இருக்கிற வீடியோ நான் எடுத்தது)#சித்திரை_முழுநிலவு_மாநாடு https://t.co/6232JuBi15 pic.twitter.com/Ru6MQofufF
முடிவு :
பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ, மதுரை முருகன் மாநாட்டில் எடுத்தது போல் பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர்.
