YouTurn

பண்ருட்டி - விழுப்புரம் சாலை மோசமாக இருப்பதாக ஹெச்.ராஜா பதிவிட்ட சீன வீடியோ!

பண்ருட்டி - விழுப்புரம் சாலை மோசமாக இருப்பதாக ஹெச்.ராஜா பதிவிட்ட சீன வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விடியா அரசு 


X link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பண்ருட்டி - விழுப்புரம் சாலை மிக மோசமாக இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த H.ராஜா-வின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.  


Youturbe link


இதே வீடியோ 'Chennai Talkies' என்ற யூடியூப் பக்கத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ளது.




உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதே வீடியோ ’Cinema tv’ என்ற யூடியூப் பக்கத்தில் ஜூலை 12, 2020 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், சீன சாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் இந்த வீடியோ Mirror தொழில்நுட்பத்தின் மூலம் வாகனம் செல்லும் திசை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது. 

மேற்கொண்டு இந்த வீடியோ குறித்துத் தேடியதில், சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ’Bili Bili’ என்ற தளத்தில் ‘Xiaoqiang Brothers 123’ என்பவர் 2020, ஜூன் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். 



அதே இடத்தில் எடுக்கப்பட்ட வேறு சில வீடியோக்களும் வெவ்வேறு தினங்களில் அப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. அப்படி 2020, ஜூன் 17ம் தேதி பதிவிட்டுள்ள வீடியோவில் ஒரு வாகனத்தில் சீன எழுத்துக்கள் இருப்பதையும் காண முடிகிறது.



பரவக் கூடிய வீடியோவின் மேலும் கீழும் உள்ள புகைப்படங்களையும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். மேலே உள்ள புகைப்படம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் உள்ள ராஜ்மஹால் சதுக்கத்தில் 2018-ன் போது எடுக்கப்பட்டது. கீழே உள்ள புகைப்படம் 2023, நவம்பர் மாதம் பெய்த மழைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது. 



தற்போது தமிழ்நாடு எனப் பரப்பப்படும் வீடியோ இதற்கு முன்னர் மும்பை என சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை.

முடிவு: 

பண்ருட்டி - விழுப்புரம் சாலை மிக மோசமாக இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த H.ராஜா பதிவிட்டுள்ள வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. இது சீனாவில் எடுக்கப்பட்டதாக 2020ம் ஆண்டு முதல் இணையத்தில் உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க