YouTurn

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி RSS நபர்கள் முஸ்லிம் பெண்ணை தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

 ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி RSS நபர்கள் முஸ்லிம் பெண்ணை தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் கடையில் பணத்தை திருட முயன்ற பெண்ணை கடை உரிமையாளர் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

RSS தீவிரவாதிகள் ஒரு இளம் முஸ்லிம் சிறுமியைத் தாக்கி, 'ஜெய் சிரி ராம்' என்று கோஷமிட வற்புறுத்தி தாக்கப்படுகிறார்.

#RSSTerrorism

#பார்பனியதீவிரவாதம் 


Facebook Link 


விரிவான விளக்கம்

சூப்பர் மார்க்கெட் போன்ற கடையில் பர்தா அணிந்திருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஒருவர் திரும்பத் திரும்ப அடிக்கும் வீடியோவை பதிவிட்டு, RSS-ஐ சேர்ந்த குண்டர் ஒருவர் முஸ்லிம் பெண் ஒருவரை ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடச் சொல்லி தாக்கியதாக சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Sylhetor News’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ இருப்பதைக் காணமுடிந்தது.



அந்த வீடியோவில், ‘மிர்பூர் கல்லூரி மார்க்கெட்-ல் இளம் பெண் ஒருவர் கடையில் பணத்தை திருடும் போது பிடிபட்டார்’ என்று பங்களா மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் பெயர் அனிகா என்றும் அவர் வசிப்பூரை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, இந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, வங்கதேசத்தில் நடந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.


மேலும் இந்த வீடியோவில், அந்த பெண் கடையின் பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருட முயற்சிக்கும் CCTV காட்சியை அந்த ஆண் தனது மொபைல்போனில் காட்டுவதை பார்க்கிறோம். அந்த  CCTV காட்சியில் ’sohanaS Pet Shop’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 



இதனைக் கொண்டு ’sohanaS Pet Shop - Mirpur college market’ என்று Google Map-ல் தேடிய போது, வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள ஹஸ்ரத் ஷா அலி கல்லூரி மார்க்கெட்-ல் இந்த கடை இருப்பதைக் காணமுடிகிறது. அதோடு அந்த வீடியோவில் எங்கும் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனிக்கிறோம்.



அதேபோல், ‘Bd Tube Master News’ என்ற பேஸ்புக் பக்கத்திலும் அந்த பெண் கடையில் திருட முயன்ற போது பிடிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்த சம்பவம் 2025 செப்டம்பர் 17ஆம் தேதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் வங்கதேசத்தில் கடையில் பணத்தை திருட முயன்ற பெண்ணை கடை உரிமையாளர் அடிக்கும் போது எடுக்கப்பட்டது என்பதும் இந்த சம்பவம் 2025 செப்டம்பர் மாதம் நடந்தது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த சம்பவத்தில் எங்கும் மதவாத கோஷம் எழுப்பப்படவில்லை.


முடிவு:


வங்கதேசத்தில் கடையில் பணத்தை திருட முயன்ற பெண்ணை கடை உரிமையாளர் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் முஸ்லிம் பெண்ணை ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடச் சொல்லி தாக்கியதாக தவறாக பரப்புகிறார்கள். 



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க