YouTurn

பாஜக ஆட்சியில் சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்து நீர் வெளியேறுவதாகப் பரவும் கேரளா வீடியோ!

பாஜக ஆட்சியில் சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்து நீர் வெளியேறுவதாகப் பரவும் கேரளா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரளாவில் சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி


விரிவான விளக்கம்

பீகாரின் பல இடங்களில் பாலம் இடிந்துவிழும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு (ஜனதா தளம்) விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 


இந்நிலையில் மோடி அரசு அமைத்த சாலையின் நடுவே தண்ணீர் பைப் உடைந்து நீரூற்றைப்போல எப்படி நீர் வெளியேறுகிறது என வீடியோ ஒன்றை திமுகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 


உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இதுதொடர்பான செய்தி ’24 நியூஸ்’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பதிவிட்டிருந்ததைக் காணமுடிந்தது. 




அதில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குன்னமங்கலம் என்னும் ஊரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குடிநீர் பைப் உடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 10 அடி வரை தண்ணீர் பீச்சி அடித்ததைத் தொடர்ந்து விபரீதம் எதுவும் நடக்காமல் இருக்க மின்சாரம் மற்றும் அந்த பைப்லைனில் செல்லும் தண்ணீர் விநியோகம்  துண்டிக்கப்பட்டதாக ‘REPORTER LIVE’ செய்தியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


News link


கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி செய்கிறது. இங்கு இதுவரையில் பாஜகவின் ஆட்சி அமைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் இருந்து பைப் உடைந்து தண்ணீர் வெளியேறும் வீடியோ பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதிசெய்ய முடிகிறது.


முடிவு:

பைப்லைன் உடைந்து தண்ணீர் வெளியேறும் வீடியோ பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. அது கேரளாவில் நிகழ்ந்தது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க