YouTurn

கனடாவில் பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு எனப் பரவும் அமெரிக்க அதிபரின் வீடியோ!

கனடாவில் பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு எனப் பரவும் அமெரிக்க அதிபரின் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி பரவும் வீடியோ, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டிற்கு செல்லும் காட்சி” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ. இதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

கனடா சென்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி7 உச்சிமாநாடு இந்த ஆண்டு கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்தியாவும் கலந்து கொண்டது. 


இந்நிலையில், கனடா சென்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் சாலை ஒன்றில் கார்கள் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து வரிசையாக சென்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது. 


#ModiInCanadapic.twitter.com/eW47ziCXPR

— ந.ஸ்ரீவத்ஸன் (@Writer_Sri_twit) June 20, 2025


#NarendraModi 🇮🇳🔥⚡ pic.twitter.com/FxMTEs5jMB

— Vinoth Arumugam (@vinothbjp100) June 19, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கனடா நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான Bruna e Joel-வின் “twocanada“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Bruna e Joel | Vida no Canadá (@twocanada)


அதில், பரவி வரும் இதே வீடியோ “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டிற்கு செல்லும் காட்சி” என்று குறிப்பிட்டு ஜூன் 16 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.


மேலும் அப்பதிவில் "உலகின் ஏழு பெரிய பொருளாதார நாடுகளான ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர கூட்டமே G7 உச்சிமாநாடு ஆகும். பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச ராஜதந்திரம் போன்ற அவசர உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டில், ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் இந்த கூட்டம் நடைபெறுகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இவருடைய வீடியோவை தான், கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


மேலும் படிக்க: ஒரே நாளில் வெவ்வேறு ஆடைகளில் வந்து ஆய்வு செய்த பிரதமர் மோடி எனப் பரவும் தவறான புகைப்படங்கள்!


மேலும் படிக்க: "பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!


முடிவு: 


நம் தேடலில், கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி பரவும் வீடியோ, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டிற்கு செல்லும் காட்சி”  என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க