யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஆயுடையப்பன் அண்ணே.. அதிபர் சீமானை 'அயோக்கிய பயலா நீ' என்று கேட்காமல் நறுக்கென்று நன்றாக கேட்டீங்க போங்க..! மனசு இதமா இருக்கு ணே...!

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
சத்துணவு திட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை அசிங்கப்படுத்திய ஆவுடையப்பன் என்று கூறி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், "சீமான் கையால் இந்த மேடையில் விருது வாங்கியிருக்கிறீர்கள், சீமான் அவர்களுக்கும், தமிழ் சொந்தங்களுக்கும் என்ன சொல்ல விரும்புறீர்கள்" என்று தொகுப்பாளர் அர்ச்சனா, விருது வாங்கிய தமிழா தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஆவுடையப்பனிடம் கேட்கிறார்.
அதற்கு பதிலளித்து பேசும் ஆவுடையப்பன், "சத்துணவு மாதிரியான திட்டங்களில் நிறை குறைகள் இருக்கலாம். குறைகள் இருந்தால் அவை நிச்சயம் சரி செய்யப்படவேண்டும். அதற்காக இந்த திட்டத்தையே மோசம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாருடைய வயிற்றையும் பட்டினி ஆக்க பார்க்கிறீர்கள். சத்துணவு வேண்டாம், காலை உணவுத் திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்களை அயோக்கியன் என்று சொல்லலாம்" என்றும் அதில் பேசுகிறார்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மே 1 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விருது வழங்கும் வீடியோவில், சரியாக 1:18:29 வினாடியில் பரவி வரும் வீடியோ பொருந்துவதை காண முடிந்தது.
அதில் பேசிய ஆவுடையப்பன், "ரொம்ப நன்றி ஜீ தமிழ், மேடைக்காக நான் சொல்லவில்லை. அண்ணன் சீமான் கையால் விருது வாங்கியதில் மகிழ்ச்சி. சீமான் அவர்களின் கருத்தியல், அரசியல் என்ன என்பது குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணனிடம் நான் பார்த்து வியந்த விஷயம் என்றால் அவருடைய எனர்ஜி (Energy) தான். காலையில் இருந்து மாலை 5 மணி வரை பேசிவிட்டு, இரவு பொதுக்கூட்டத்தில் பேச அழைத்தாலும் கூட, கையை ஓங்கி நாம் தமிழர் என்று பேசுவார். ஆனால் அவரிடம் இது எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் தெரியவில்லையே பா என்று சொல்வார்" என்று பேசுயிருந்தார்.
[video width="1364" height="760" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/06/Zee-Tamizh-Golden-Award-Awards-Seeman.mp4"][/video]
ஆனால் பரவி வரும் வீடியோவில், ஆவுடையப்பன் பேசிய இந்த ஆடியோவை நீக்கிவிட்டு, வேறொரு ஆடியோவை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பியிருந்ததை காண முடிகிறது.
சரியாக மே 26 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியின், 44 வது நிகழ்ச்சி தொகுப்பின் (Episode 44) வீடியோவில், 34:51 நிமிடத்தில், ஆவுடையப்பன் "சத்துணவு மாதிரியான திட்டங்களில் நிறை குறைகள் இருக்கலாம். குறைகள் இருந்தால் அவை நிச்சயம் சரி செய்யப்படவேண்டும். அதற்காக இந்த திட்டத்தையே மோசம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாருடைய வயிற்றையும் பட்டினி ஆக்க பார்க்கிறீர்கள். சத்துணவு வேண்டாம், காலை உணவுத் திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்களை அயோக்கியன் என்று சொல்லலாம்" என்று பேசுகிறார்.
[video width="1920" height="1080" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/06/tamizha-tamizha-ep-44-out.mp4"][/video]
இதன் மூலம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆவுடையப்பன் பேசிய ஆடியோவை, சீமான் மற்றும் ஆவுடையப்பன் கலந்து கொண்ட விருது நிகழ்ச்சியின் வீடியோவோடு எடிட் செய்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் 2023 செப்டம்பர் 01 அன்று, தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை விமர்சனம் செய்து, இது தேவையில்லாதது, ஏழை குழந்தைகளுக்கு கூட காலை உணவை பெற்றோர் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு பெற்றோர் கொடுப்பதையும் சாப்பிட்டு விட்டு, பள்ளியிலும் வந்து சாப்பிடுவதால் தான் விமர்சனம் வருகிறது என்று தினமலர் காலை உணவு திட்டம் தொடர்பாக கிண்டல் செய்து வெளியிட்டிருந்த செய்தியை மறைமுகமாக இவர் குறிப்பிட்டு, அரசின் காலை உணவுத் திட்டத்தை விமர்சனம் செய்து பேசியிருந்ததை காண முடிகிறது.
மேலும் படிக்க: காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !
இதற்கு முன்பே காலை உணவு திட்டம் குறித்து அருவருப்பு தலைப்பு வெளியிட்டிருந்த தினமலர் ஊடகத்தின் செய்தி குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், சத்துணவு திட்டம் தொடர்பாக சீமானை அசிங்கப்படுத்திய ஆயுடையப்பன் எனப் பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.

அதிபர் சீமானை 'அயோக்கிய பயலா நீ' என்று கேட்காமல் நறுக்குனு நன்னா கேட்டிங்க போங்க..!
மனசு இதமா இருக்கு ணே...! pic.twitter.com/GVYC9DqfhY
— Rajesh kumar (@Rajesh_CP11) June 7, 2024