YouTurn

தமிழ்நாட்டில் முதியவரைக் கழுதை கடித்ததாகப் பரவும் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம்!

தமிழ்நாட்டில் முதியவரைக் கழுதை கடித்ததாகப் பரவும் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடந்தது. இச்சம்பவத்தின் போது அருகிலிருந்தவர்கள் முதியவரைக் காப்பாற்றியுள்ளனர்.

பரவிய செய்தி

கவனமாக இருங்கள், இப்போது விடியல் ஆட்சியில் கழுதைகளும் கடிக்க ஆரம்பித்துவிட்டன. நடந்து செல்லும் போது கழுதைகள் அருகில் வந்தால் எச்சரிக்கை ஜாக்கிரதை…

image.png

X link

விரிவான விளக்கம்

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரைக் கழுதை ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


பரவக் கூடிய இதே வீடியோ ‘Newsflare’ என்ற தளத்தில் இருப்பதைக் காண முடிந்தது. கழுதை முதியவரைக் கடித்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை, 7-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

மேற்கொண்டு இது பற்றி தேடியதில் ‘Zee News’ தளத்திலும் செய்தி வெளியாகியிருப்பதைக் காண முடிந்தது. இந்தி-யில் இருந்த அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில், அதிலும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png

மேலும், ’Free Press Journal’ தளத்திலும் இது தொடர்பான படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. முதியவரைக் கழுதை கடித்ததும் அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்று, ஒருவழியாக முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இதே போன்ற சம்பவம் அப்பகுதியில் நடந்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்தது என்பதை உறுதி செய்ய முடிகிறது. மக்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கும் நோக்கத்தில் இது தமிழ்நாட்டில் நடந்ததாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. 


முடிவு: 


தமிழ்நாட்டில் சாலையில் நடந்து சென்ற முதியவரைக் கழுதை ஒன்று கடித்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்தது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.