யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தனியாக எங்கு சென்றாலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.. முக்கியமாக பெண்கள் தனியாக செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்..
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
லிப்டில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனியாக செல்லும் பெண்களிடம் லிப்டில் நகை மற்றும் பணத்தை திருடுவதைப் பாருங்கள். எனவே தனியாக எங்கு சென்றாலும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறி 1:18 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், "EYE SPOT" என்ற யூடியூப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. கடந்த 2022 ஆகஸ்ட் 14 அன்றே பரவி வரும் இதே வீடியோ, "இது எதிர்பாராதது|| கவனமாக இருங்கள் || EYE SPOT யூடியூப் மூலம் சமூக விழிப்புணர்வு வீடியோ " என்ற தலைப்பில் "EYE SPOT" யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
3 நிமிடங்கள் 43 வினாடிகள் கொண்ட இந்த முழு வீடியோவில், முதலில் தனியாக வரும் ஆண்களை சேலை கட்டிய அந்த பெண் எதுவும் செய்யாததையும், பின்பு தனியாக வரும் ஒரு பெண்ணிடம் மட்டும், சேலை கட்டிய அந்த பெண், மயக்க மருந்து கலந்த கைக்குட்டையைப் (kerchief) பயன்படுத்தி அவரை கீழே விழச் செய்து, அந்தப் பெண்ணிடம் உள்ள நகை மற்றும் மற்ற உடைமைகளை எடுத்துவிட்டு செல்வதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால் "EYE SPOT" என்ற யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், சமூக விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது இது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யூடியூப் பக்கத்தை மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், சமூக விழிப்புணர்வு வீடியோ என்று குறிப்பிட்டு இதே போன்று பல வீடியோக்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம் விழிப்புணர்வுக்காக, லிப்டில் தனியாக வரும் பெண்ணிடம் நகையைப் பறிப்பது போன்று எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோவை, உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: கோவிலில் பக்தர்களுக்கு கொடுக்கும் குளோப் ஜாமுனில் சிறுநீர் கழித்த நபர் எனப் பரவும் போலி வீடியோ !
முடிவு:
நம் தேடலில், லிப்டில் செல்லும் பெண்களிடம் நகையைப் பறிப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
தனியாக எங்கு சென்றாலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்........
முக்கியமாக பெண்கள் தனியாக செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்......_ pic.twitter.com/n1cGihnh6X
— கொக்கி வண்டி (@LifeOnChakra) March 6, 2024
वायरल वीडियो कब और कहाँ का है? रील है या रियल है? नहीं मालूम!!! लेकिन सतर्क करने वाला है। pic.twitter.com/2J4zThVKVi
— SANJAY TRIPATHI (@sanjayjourno) February 29, 2024