YouTurn

'ரதம் செல்லும் போது வழி மறித்த முஸ்லீம் காரை தகர்த்திய இந்துக்கள்' எனப் பரவும் தவறான செய்தி!

'ரதம் செல்லும் போது வழி மறித்த முஸ்லீம் காரை தகர்த்திய இந்துக்கள்' எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் ஒரு முஸ்லீம், காரை நிறுத்தி நான் எடுக்க மாட்டேன் என்று கூற, நீண்ட நேரம் காத்திருந்த இந்துக்கள் கடைசியில் காரை தூக்கி குறுக்கே எறிந்தனர்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் ஒரு காரை நிறுத்தி, நான் எடுக்க மாட்டேன் என்று ஒரு முஸ்லீம் நபர் கூறினார். நீண்ட நேரம் காத்திருந்த இந்துக்கள் கடைசியில் அந்த காரை தூக்கி குறுக்கே எறிந்தனர் என்று கூறி 53 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் அந்த வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை பலர் சேர்ந்து தூக்கி நகரத்துவதையும், பின்னர் அந்த சாலையின் வழியே ரதம் இழுத்துச் செல்லப்படுவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், Public tv பக்கத்தில், இது குறித்து "மங்களூருவில் கோயில் தேர் திருவிழாவை நடத்த பக்தர்கள் வாகனங்களை கவிழ்த்து சேதப்படுத்தினர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

அதில், "மங்களூருவில் உள்ள பாப்பநாடு ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோவில் திருவிழாவின் போது, ​​ரதம் செல்வதற்காக, பக்தர்கள் பல வாகனங்களை கவிழ்த்து சேதப்படுத்தினர். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரதம் சென்ற சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஸ்கூட்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பக்தர்கள் கவிழ்த்தனர். இது ரதத்தை இழுத்து வருபவர்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் ஒரு காரை தூக்கி நகர்த்தியது போல, பக்தர்கள் ரதம் செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களையும் இவ்வாறு கவிழ்த்தி சேதப்படுத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.



மேலும் பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்ட காரின் எண் KA05MV1554 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், காரின் உரிமையாளர் விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். 

RTO vehicle information இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி வாகன உரிமையாளர் பெயர் வெங்கடேஷ் D என்பதை அறிய முடிந்தது. இதே போன்று Car Info மற்றும் Car 24 ஆகிய இணையதளங்களில் வாகன உரிமையாளரின் பெயர் திவ்யா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தவிர வேறு எந்த முஸ்லீம் நபரின் பெயரும் கார் உரிமையாளராக காட்டப்படவில்லை. எனவே முஸ்லீம் நபர் ஒருவர் ரதம் செல்லும் பாதியில் காரை குறுக்கே நிறுத்தியதாகப் பரவும் செய்திகள் தவறானவை.



மேலும் படிக்க: அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் லண்டன் ரதயாத்திரை வீடியோ !

மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த 12 தங்க வாகனங்கள் எனப் பரவும் தெலங்கானா கோவில் வீடியோ !

முடிவு:

நம் தேடலில், ரதம் செல்லும் போது வழி மறித்த முஸ்லீம் காரை தகர்த்த இந்துக்கள் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க