YouTurn

தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பப்படும் சாதிய வன்கொடுமை வீடியோ! உண்மை என்ன?

தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பப்படும் சாதிய வன்கொடுமை வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சியிலிருந்த போது நடந்த சாதிய வன்கொடுமை சம்பவமாகும்.

பரவிய செய்தி

தமிழகத்தில் நடப்பது திமுகவின் விடியா சமூக நீதி ஆட்சியே.... தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின் ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் மேய்ந்ததால் அவரை காலில் விழ வைத்து வீடியோ வெளியிட்ட சாதி வெறியர்கள்....
#DMKFailsTN

image.png

Archive Link 

விரிவான விளக்கம்

ஒரு மனிதனின் மாண்பினை உடைக்கும் வகையில் அவரை மற்றொருவரின் காலில் வலுக்கட்டாயமாக விழ வைத்து அதனை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் திமுக ஆட்சியில் சமீபத்தில் நடந்தது என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.


image.png

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE HINDU’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதியன்று வெளியான இந்த செய்தியிலிருந்து, ‘கயத்தார் தாலுகாவில் உள்ள ஓலைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஆடு மேய்த்துகொண்டிருந்த போது, அவரது ஆடுகள் சிவசங்கு என்ற இடைநிலை சாதியைச் சேர்ந்தவரின் ஆட்டுக் கூட்டத்தில் கலந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, சிவசங்கு பால்ராஜை சாதி ரீதியாக தகாத வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தியுள்ளார். மேலும், சிவசங்கு  அவரது ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து பால்ராஜை அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி காலில் விழ வைத்துள்ளார்கள்’ என்று தெரியவருகிறது.


image.png


இது குறித்து மேலும் தேடியபோது,  ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் 2020 அக்டோபர் மாதம் வெளியான செய்திபடி, ‘பால்ராஜ் இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், SC/ST வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும்’ தெரியவருகிறது. 


image.png


இதிலிருந்து, இந்த காலில் விழ வைத்த சாதிய வன்கொடுமை சம்பவம் 2020ஆம் ஆண்டு நடந்தது என்பதும், அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது என்பதும் தெளிவாகிறது.


முடிவு:


கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சியில் நடந்த சாதிய வன்கொடுமை சம்பவத்தை தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக பாஜகவினர் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.