YouTurn

இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் உள்ள ஹஸ்பானியா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தை, இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ.

பரவிய செய்தி

இது எந்த ஊர் என்று தெரியவில்லை....கருணை இல்லங்கள் ஆயிரம் இருந்தும் கருணை இல்லாத காட்டுமிராண்டிகளின்  களியாட்டங்கள்..Send all groups please.... These cruel dogs must be punished 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

இந்தியாவில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சிகளை பதிவிட்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது வங்கதேச ஊடகமான dainikbartabd ஊடகத்தில், ”சாந்தியாவில் மகனும் மருமகளும் தாயைக் கொல்ல முயற்சிக்கும் வீடியோ வைரலாகி, 5 பேர் கைது செய்யப்பட்டனர்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 30 அன்று பரவி வரும் வீடியோவின் screenshotகளுடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வங்கதேசத்தின் பப்னா மாவட்டத்தில் சாந்தியா உபசிலா பகுதியில் உள்ள ராமச்சந்திரபூர் கிராமத்தில் தாயை அடித்த சம்பவம் பேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, மகன் மற்றும் மருமகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடியப் போது, more news bd ஊடகப்பக்கத்தில் ”மருமகள் மாமியாரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகிறது: மகனுடன் 5 பேர் கைது” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் பப்னாவின் சாந்தியாவில் 75 வயதான காஞ்சன் கதுன், குடும்ப தகராறில் தனது சொந்த மகனாலும், மருமகளாலும் இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டதாகும், இதையடுத்து ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு மகன் நஸ்ருல் இஸ்லாம், மருமகள் சோனாலி கதுன் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள ஹஸ்பானியா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தை, இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவது போன்று தவறாக திரித்துப் பரப்புவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க