YouTurn

விஜயை விமர்சனம் செய்த நடிகை ரோஜா என்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

விஜயை விமர்சனம் செய்த நடிகை ரோஜா என்று பரவும் வீடியோ! உண்மை என்ன? 

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி, ஜூலை 08, 2025 அன்று பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, “விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டார்” என்று ரோஜா செல்வமணி கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். மக்களுக்காக நிற்கலை. இதிலேந்தே தெரிகிறது அவர் டைம்பாஸ் பாலிடிக்ஸ் பண்ணுகிறார் என்பது

- நடிகை ரோஜா

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. 

இந்நிலையில் விஜய் மக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதாகவும், இதிலிருந்து தெரிகிறது விஜய் பொழுதுப்போக்கிற்காக அரசியல் செய்வதாகவும் நடிகை ரோஜா தெரிவித்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோ குறித்து தேடினோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ”Drama Artist பவன் கல்யாண்... - ரோஜா கடும் விமர்சனம்” என்ற தலைப்பில் ஜூலை 8, 2025 அன்று நடிகர் ரோஜா அளித்த முழு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அதில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் குறித்து விமர்சித்து ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா பேசியிருந்தார். பரவி வரும் வீடியோவில் உள்ளது போல் பேசியுள்ளரா என்பதை தேடினோம். சரியாக 8.58 நிமிடத்தில் ”ஒரு எம்.ஜி.ஆர் மாதிரி, ஒரு ஜெயலலிதா மாதிரி, ஒரு என்.டி.ஆர் மாதிரி…ஜனங்கள் நம்ம நம்பும் போது, நம்ம பின்னல வரும் போது, அவங்களுக்காக எவ்வளவு தூரம் வேணும்னாலும் fight பண்ணனும். திடீரென போகக்கூடாது, அவங்கள ரோட்டுல விட்டுவிட்டு போகக்கூடாதுனு சொல்வேன்” என்று அவர் கூறுவதை பார்க்கமுடிந்தது. 


அதே போல் தினமலர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும், “பவன் கல்யாண் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்வதாக ரோஜா தாக்கு” என்ற தலைப்பில் இதே பேட்டி பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதிலும் ஆந்திரா துணை முதலமைச்சர் பவண் கல்யாண் குறித்தே விமர்சித்து பேசியிருந்தார். 


முடிவு: 

எனவே, பரவி வருவது நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி, ஜூலை 08, 2025 அன்று பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, “விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டார்” என்று ரோஜா செல்வமணி கூறியதாகக் கூறி  தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க