YouTurn

நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை அடித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை அடித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் சூர்யா ரசிகர்களை திட்டிய சம்பவத்தோடு தொடர்புடையது. அதே போல் சூர்யா தன்னை தாக்கியதாக இளைஞர் ஒருவர் பேசுவது போன்று உள்ள காட்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு சாலையில் ஒரு பெண்ணிடம் இளைஞர்கள் தகராறு செய்தபோது, சூர்யா அந்த பெண்ணுக்கு உதவிய போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

BREAKING  : Actor #Suriya Beat poor innocent boy who has recovered from brain fever few days ago  After that he suffered from head pain & vomiting too …

Real face of Suriya

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன்பு மூளை காய்ச்சலிலிருந்து குணமடைந்த ஒரு இளைஞரை அடித்ததால், அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது தான் சூர்யாவின் உண்மையான முகம் என்று கூறி வீடியோ ஒன்று தற்போது பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் வீடியோ காட்சிகள் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ”VIDEO FOOTAGE: SURIYA Blasts for Rash BIKE Riding! | Suriya's Message to his FANS!” என்ற தலைப்பில் ஜனவரி 18, 2018 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த போது, தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக் ஓட்டியதை பார்த்தார். அதனால் அவர்களை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போன்று, சூர்யா தன்னை தாக்கியதாக இளைஞர் ஒருவர் பேசுவது போன்று உள்ள காட்சி குறித்து தேடிப் பார்த்தோம். Filmibeat ஊடகத்தின் இணையதளப்பக்கத்தில், ”சூர்யா விவகாரத்தில் நடந்தது என்ன?.. பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்” என்ற தலைப்பில் ஜூன் 01, 2016 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் புஷ்பா கிருஷ்ணஸ்வாமி என்ற பெண்ணின் காரை, 2 இளைஞர்கள் மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அந்த பக்கமாக காரில் சென்ற நடிகர் சூர்யா, காரை நிறுத்தி அந்த பெண்ணை காப்பாற்றி உதவியுள்ளார். அந்த சம்பவத்தின் தொடர்புடைய பேட்டி தான் அது. 


முடிவு: 

எனவே, பரவி வரும் வீடியோ, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் சூர்யா ரசிகர்களை திட்டிய சம்பவத்தோடு தொடர்புடையது. அதே போல் சூர்யா தன்னை தாக்கியதாக இளைஞர் ஒருவர் பேசுவது போன்று உள்ள காட்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு சாலையில் ஒரு பெண்ணிடம் இளைஞர்கள் தகராறு செய்தபோது, சூர்யா அந்த பெண்ணுக்கு உதவிய போது எடுக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க