யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
தெரு நாய் தொல்லைக்கே இன்னும் தீர்வை காணோம். போதாக்குறைக்கு, இப்போது பசுமாட்டுத் தொல்லை வேறு. பாவம் வெகுஜன மக்கள்! திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில், நிகழ்ந்த விபத்துக் காணொளி இது.
விரிவான விளக்கம்
சமீபத்தில் மாடு ஒன்று முதியவர் ஒருவரை சாலையின் நடுவே தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. 1:38 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை பலரும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிகிறது.
தங்களுடய மாடுகளை இப்படி தெருவுல சுற்ற விடுறோமேன்னு கொஞ்சம் கூட புத்தி இல்லாத மனிதர்கள்.
தனி மனித ஒழுக்கம் இல்லாத சமுகம் உருப்படவே உருப்புடாது https://t.co/BT2YKswVAV
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் எடுத்த வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Times of India” ஊடகப் பக்கத்தில் ஜூன் 25 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கல்வானில் மாடு தாக்கியதில் 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த நபர் கல்வானைச் சேர்ந்த பால்சந்திர மல்புரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று “Amburexpress“ ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில் முதியவரை மாடு முட்டியதாக பரவி வரும் வீடியோ, மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.