YouTurn

அகமதாபாத் மெட்ரோ நிலையம் என்று பரவும் ஜப்பான் வீடியோ!

அகமதாபாத் மெட்ரோ நிலையம் என்று பரவும் ஜப்பான் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது ஜப்பான் நாட்டை சேர்ந்த monorail track switching ஆகும். அதே போல் இந்த வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பரவி வருகிறது.

பரவிய செய்தி

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் நிலையம்......

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதே போல் மற்றொரு பதிவில் இது சீனாவில் உள்ள ரயில் பாதை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  


உண்மை என்ன?

பரவி வரும் இந்த வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது hdvideoridha என்ற யூடியூப் சேனலில் "japan's monorail track switching,hd" என்ற தலைப்பில் 20 ஜூன் 2018 அன்றே பரவி வரும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதை வைத்து மேலும் எதேனும் தகவல் கிடைக்கிறதா என்பது குறித்துதேடி பார்த்தோம். Livedoor. jp என்ற ஜப்பான் இணையதளப்பக்கத்தில்இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்த போது, ஜப்பானில் நகர்ப்புற போக்குவரத்தின் ஒரு பகுதியாக மோனோ ரயில்கள் பயன்படுத்துவதாகவும், சுற்றுலா தலங்களைஅணுகுவதற்கும், நகரங்களுக்கு இடையே பயணிப்பதற்கும் அவை உதவுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் interesting engineering என்ற இணையதளப்பக்கத்திலும், "Watch These Japanese Monorail Lines Change Paths with Ease" என்ற தலைப்பில் இது குறித்து கூறப்பட்டிருந்தது. அதில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இந்த மோனோ ரயில் பாதைகள் இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,30,000 பயணிகள் பயணிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு:

நம் தேடலில்,பரவி வரும் வீடியோ ஜப்பான் நாட்டை சேர்ந்த monorail track switching ஆகும். அதே போல் இந்த வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பரவி வருகிறது. இதனை குஜராத் மற்றும் சீனாவில் உள்ள மெட்ரோ நிலையம் என்று கூறி தவறாக பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க