யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அல்ல. பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர்.
பரவிய செய்தி
CCTV Footage: Rajinikanth Sir Slipped While Picking Up Newspaper, Fans Concern !!

விரிவான விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாகக் கூறி சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செய்தித்தாள் எடுக்கும் போது, ஒரு நபர் திடீரென வழுக்கி விழும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
Be Careful @rajinikanth sir.. 😢 pic.twitter.com/hTTNBrGMEe
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Rajaram Tallur என்ற பேஸ்புக் பக்கத்தில் ஜூலை 24அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் காலை வழக்கம் போல் செய்தித்தாளை எடுக்கச்செல்லும் போது கால் வழுக்கி கீழே விழுந்ததாகவும், காயங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வீடியோவிற்கு வீடியோகிராஃபர் இல்லை என்றும், இது வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான ஒரு சிறிய காட்சி எனவும் கூறியிருந்ததார்.
இது குறித்து மேலும் தேடி பார்க்கையில், அதே பக்கத்தில் ஜூலை 30ஆம் தேதி இந்த வீடியோ குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதில், "ஒரு வாரத்திற்கு முன்பு நான் வீட்டில் வழுக்கி விழும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டேன். தற்போது இது நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் நடந்தது போல் ஊடகங்களிலும், இணையத்தில் பரப்பி வருகிறனர்", என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர் என்பது தெரியவந்தது.

முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அல்ல. பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர். இந்நிலையில் பலரும் நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகக் கூறி தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.