யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலில் நிற்போம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களின் அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்” என்றே பேசியுள்ளார்.
பரவிய செய்தி
Stalin Model Core
உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும்.
வாழ்த்துகள் வாழ்த்துகள் @mkstalin!

விரிவான விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுவது போன்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராகினோம் என்று அவர் பேசியதாக இடம்பெற்றிருந்தது.
Stalin Model Core 🤡
உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும்.
வாழ்த்துகள் வாழ்த்துகள் @mkstalin!#DMKFailsTN#ByeByeStalin pic.twitter.com/uI0Tm8R5ZY
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தின் யூடியூப் shorts பக்கத்தில் முதலமைச்சர் பேசிய வீடியோ வெளியாகியிருந்தது. அதில் ”அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராகும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் சாமானியனுக்காக போராடுவது” என்றே அவர் பேசியிருந்தார். இதை தான் எடிட் செய்து திரித்து பரப்புகின்றனர்.

இது குறித்து மேலும் தேடிய போது, இந்து தமிழ் ஊடகத்தில் செப்டம்பர் 15 அன்று, “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை! - ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் முதலமைச்சர் பேசியது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அதை வைத்து பார்க்கும் போது, முதலமைச்சர் பேசியதை எடிட் செய்து பரப்புவது தெரியவந்தது.

முடிவு:
நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய வீடியோவின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.