யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரஷ்யாவில் கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது. மேலும் ஜூன் 06-லிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பரவிய செய்தி
எங்கள் மக்கள் முள்ளிவாய்க்காலில் நடந்ததை மறக்கமாட்டார்கள் இப்போது காசாவில் மக்கள் பட்டினியால் துடித்தார்கள் அடுத்து இஸ்ரேல் நடக்கிறது வினை விதைத்தவன் வினையை அனுபவிப்பார்கள்.

விரிவான விளக்கம்
இஸ்ரேல் – ஈரான் போர் இரண்டாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் இஸ்ரேலுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்த நிலையில் ஈரானின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இஸ்ரேலியர்கள் நடந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ஜூன் 8, 2025 அன்று Rusich என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் வீடியோ போன்று ஒரு வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் "உங்களுக்கு பிரகாசமான, அமைதியான நாளாக அமைய வாழ்த்துக்கள் என்றும், உங்கள் வீடு வசதியாகவும், உங்கள் மனம் தெளிவாகவும் இருக்கட்டும்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Happy Trinity, friends! ☦️
Wishing you a bright, peaceful, and truly warm day. May your home be cozy, your mind clear, and your loved ones close by. pic.twitter.com/87tHgXANXM
அதே போல் style_of_russian_kings_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜூன் 10ஆம் தேதி, அதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த பதிவில், “50 ஆயிரம் மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு சிலுவையை பின் தொடர்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து இது குறித்து தேடிய போது, Russian Australian Cultural Centre - Vera என்ற முகநூல் பக்கத்தின் பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் ரஷ்யாவில் உள்ள கிரோவ் என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ புனிதர் நிகோலஸ் நினைவுச் சின்னத்தை நோக்கி மக்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தாண்டு 40 முதல் 50 ஆயிரம் மக்கள் இந்த புனித பயணத்தில் பங்கேற்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் olga_1205 என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூன் 6, 2025 அன்று பரவி வரும் அதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. ரஷ்ய மொழியில் இருந்த அந்த பதிவை, மொழிமாற்றம் செய்து பார்த்த போது, ரஷ்யா வெலிகோரெட்ஸ்கி ஊர்வலத்தில் 22 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Важное событие, о котором МОЛЧАТ практически все СМИ
22 тысячи православных русских людей идут Великорецким крестным ходом. Идут во славу Христа, Богородицы и Николая Угодника
22 тыс человек оставили дела и работу, чтобы несколько дней молиться Господу о прощении грехов
🙏 pic.twitter.com/bIpu38fMJk
முடிவு :
நம் தேடலில், கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்திலும் கிறிஸ்தவ புனித யாத்திரை என்று தெளிவாக குறிப்பிட்டிருந்ததை காணமுடிந்தது. எனவே தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிய காட்சி என்று தவறாக பரப்பி வந்தது உறுதியானது.