YouTurn

சேதாரம் அடைந்துள்ள pink பேருந்துகள் என்று தவறாக பரவும் வீடியோ!

சேதாரம் அடைந்துள்ள pink பேருந்துகள் என்று தவறாக பரவும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில் இருப்பது அனைத்தும் scrapped பேருந்துகள் ஆகும். 15 - 16 வருடங்கள் ஆனாதல், அந்த பேருந்துகளை scrap-ல் போடுவது இயல்பான ஒன்று தான். பேருந்துகளில் உள்ள இரும்புகளை எல்லாம் தனிதனியாக எடுத்து அதை உருக்கி மறுசுழற்சி செய்வார்கள்.

பரவிய செய்தி

இந்த  பஸ் தான் போட்டியில் முதல் இடத்தில் வரும் துணை முதல்வர் சொன்னாரே மொத்த பஸ் அப்பளம் மாதிரி நொருங்கி கடக்குது

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் விடியல் பேருந்துகள் குறித்து பல விவாதங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் கூட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிங் பேருந்து தான் முதலிடம் வரும் என்று பேசிருந்தார். அதை குறித்து தற்போது தமிழ்நாட்டில் உள்ள pink பேருந்துகள் அனைத்தும் சேதாரம் அடைந்துள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் hnt_clicks என்ற water mark இருந்ததை பார்க்கமுடிந்தது. இதையடுத்து அந்த வாட்டர் மார்க்கை வைத்து தேடினோம். அப்போது அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. ஏப்ரல் 04, 2026 அன்று பரவி வரும் அதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் TNSTC SCRAPPED BUS என்று குறிப்பிடப்பட்டிருந்தது பார்க்கமுடிந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, veeraa என்ற யூடியூப் பக்கத்தில் ”நம்ம விருதுநகரில் SCRAPPED IN TNSTC BUSES Virudhunagar” என்ற தலைப்பில் 23 செப்டம்பர், 2024 அன்று ஒரு வீடியோ பதிவாகியிருந்தது. அந்த வீடியோவும், பரவும் வீடியோவும் ஒத்துப்போவதை பார்க்கமுடிந்தது. 


பரவி வரும் வீடியோவில் இருப்பது அனைத்தும் scrapped பேருந்துகள் ஆகும். 15 - 16 வருடங்கள் ஆனாதல், அந்த பேருந்துகளை scrap-ல் போடுவது இயல்பான ஒன்று தான். பேருந்துகளில் உள்ள இரும்புகளை எல்லாம் தனிதனியாக எடுத்து அதை உருக்கி மறுசுழற்சி செய்வார்கள். இதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகளின் வீடியோவை எடுத்து, சேதாரம் அடைந்துள்ள pink பேருந்துகள் என்று பரப்புகின்றனர். 


முடிவு: 

எனவே, தமிழ்நாட்டில் உள்ள pink பேருந்துகள் அனைத்தும் சேதாரம் அடைந்துள்ளதாக பரவி வரும் வீடியோ தவறானவை. வீடியோவில் இருப்பது அனைத்தும் scrapped பேருந்துகள் ஆகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க