யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பஞ்சாப் வெள்ளத்தில் ஆடு மாடுகள் அடித்து செல்லப்படுவதாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
பசுமாட்டை பாதுகாக்கிறோம் என்று முஸ்லிம்களை அடித்தே கொல்வார்கள் ஆரிய பார்ப்பன ஆர் எஸ் எஸ் காவி இந்துத்துவ தீவிரவாத கும்பல்... எருமை மாட்டையோ மற்ற பசு மாட்டையோ வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முன்வர மாட்டார்கள் அந்த சங்கிகள்... பஞ்சாப் வெள்ளம்...

விரிவான விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கழுத்தளவு வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான கால்நடைகள் (எருமை மாடுகள்) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்வது போன்ற 18 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமுக வலைத்தலப்பக்கங்களில் வைரலாப் பரவி வருகின்றது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ தகவல் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது தொடர்பான செய்திகளோ தகவல்களோ ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.
இதனை தொடர்ந்து, பரவிவரும் வீடியோவில் இருப்பது போல கால்நடைகள் வெள்ளத்தில் மூழ்கியது போன்ற காட்சிகள் எடிட் செய்து உருவாக்கப்பட்டவையோ என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவை 'Was It AI' இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது.



இவற்றிலிருந்து பரவி வரும் வீடியோ முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
இதற்கு முன்பும் இதேபோன்று AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ குறித்து ஆய்வு செய்து நம் யூடர்ன் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!
மேலும் படிக்க: செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
மேலும் படிக்க: ‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!
முடிவு :
நம் தேடலில் பஞ்சாப் வெள்ளத்தில் கால்நடைகள அடித்துச் செல்வதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ. இதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.