YouTurn

திருமணமான 23 ஆண்டில் 24 குழந்தைகளைப் பெற்ற தாய் எனப் பரவும் தவறான தகவல்!

திருமணமான 23 ஆண்டில் 24 குழந்தைகளைப் பெற்ற தாய் எனப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தான் வளர்க்கும் மரங்களையும் சேர்த்து தனக்கு 24 குழந்தைகள் எனச் சொன்னதை சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

Mother of 24 children 16 male children 8 female children.  Have you seen their happiness? திருமணம் முடிந்து 23 வருசத்தில் ஒற்றை இரட்டை குழந்தைகள் என 24 குழந்தைகளுக்குத் தாயென யாராலும் கூற முடியாது... குழந்தை தயாரிப்பு தொடருமாம்‌..வாழ்த்துவோம் இத்தாயை இந்து ஜனத்தொகையை பெறுக்கும் வேகத்திற்காக… நம்மவர்கள் இவ்வளவு பெற்றுக்கொள்ளாவிட்டாலும் குறைந்த பட்சம் நான்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

image.png

X link

விரிவான விளக்கம்

இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி 23 ஆண்டுகளில் 24 குழந்தை பெற்றுக் கொண்டதாக நேர்காணலில் கூறியுள்ளார் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவுகிறது. பரவக் கூடிய பதிவுகளில் இந்து மத மக்கள் தொகையை பெறுக்குவதற்காக குறைந்தது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 

https://x.com/i/web/status/1835336611715809434

உண்மை என்ன?

இந்தியில் பேசும் அப்பெண்மணி தனக்கு 24 குழந்தைகள் எனச் சொல்வதைப் பரவக் கூடிய வீடியோவில் கேட்க முடிகிறது. இது குறித்து முக்கிய வார்த்தைகள் கொண்டு தேடியதில், 24 குழந்தைகளின் தாயைச் சந்தித்ததாகக் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி Bharat Prime என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. பரவக் கூடிய வீடியோவில் இருப்பது போன்று அதிலும் தனக்கு 24 குழந்தைகள் என அப்பெண்மணி சொல்வதைக் காண முடிகிறது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வைகையில் அந்த பெண்மணி அளித்த நேர்காணல் ஆகஸ்ட் 18ம் தேதி ’News World’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அதில், தனக்கு ஒரு மகன் மற்றும் மகள் மட்டுமே இருப்பதாகவும் தான் வளர்க்கும் மரங்களைக் குழந்தைகளாகக் குறிப்பிட்டது சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்பப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அதன் நிலைத்தகவலிலும் (description) இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று மற்றொரு வீடியோவிலும் மரங்களைக் காண்பித்து தனது குழந்தைகள் என அப்பெண் சொல்வதைக் காண முடிகிறது. 

பரவக் கூடிய வீடியோவில் இருக்கும் குஷ்பு பதக் என்ற பெண் யூடியூப் பக்கம் ஒன்றில் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களில் நடித்துள்ளார். அவர் ஒரு நேர்காணலில் தன் வளர்க்கும் மரங்களைத் தனது குழந்தைகள் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ஆனால், அதனை உண்மையான குழந்தை என சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்பியுள்ளனர்.

முடிவு: 

திருமணமான 23 வருடத்தில் 24 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. அப்பெண்மணி தான் வளர்க்கும் 22 மரங்களையும் சேர்த்து தனக்கு 24 குழந்தைகள் எனக் கூறியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.