YouTurn

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தவறானவை!

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தவறானவை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021-ல் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று ஆ.ராசா பேசியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

2G ராசா-க்கு ஸ்டாலின் மேல என்ன வன்மமோ தெரியல, இப்படி காறி துப்பி இருக்கார்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணை பொதுச் செயலாளருமான அ.ராசா, முதலமைச்சர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் Red Pix என்ற வாட்டர் மார்க் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதன் அடிப்படையில் எங்களது தேடலை தொடங்கினோம். அப்போது Red Pix 24x7 ஊடகத்தில் பிப்ரவரி 15, 2021 அன்று ”A raja speech about edappadi palanisamy and modi” என்ற தலைப்பில், ஆ.ராசா அளித்த முழு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை தேடினோம். 


அப்போது வீடியோவின் தொடக்கத்தில்(0.20 நொடி) இது குறித்து பேசுவதை பார்க்கமுடிந்தது. அதில் ”நாளைக்கு ஸ்டானின் சூரியன கொண்டு வந்து secretariatல வைக்கிறன்னு சொல்றாரு, சாத்தியமா. ஆன அதுக்கு எடப்பாடி பழனிசாமி சூரியனை கொண்டு வந்து சட்டமன்றத்தில் கட்டுவோம்னு தீர்மானம் போட்ட முட்டாள் யார். இப்போ சொல்றருல சாத்தியமே இல்லனு, அப்போ தீர்மானம் போடும் போது தமிழ்நாடு மக்கள் கிட்ட சொல்லிருக்கனும் சாத்தியமே இல்லனு. ஊர ஏமாத்துறதுக்கு தீர்மானம் போட்டுட்டு…அந்த தீர்மானத்த ஜனபதிக்கு அனுப்பி வைக்கிறன்னு சொல்லிட்டு, ஜனதிபதி எங்க இருக்காருனு கூட தெரியாம, போய்ருச்சி போய்ருச்சி பொய் சொல்லிட்டு இருக்குற முதலமைச்சர் எதுல, சேத்துகிடுவீங்கன்னு கேக்குறேன்…வார்டு கவுன்சிலரா கூட  தகுதி இல்லாதவர கோட்டைல முதலமைச்சரா உக்கார வச்சிருக்குறது நியாமா” என்றே அவர் பேசியிருந்தார். இதை எடிட் செய்தி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவர் பேசியதாக பரப்புகின்றனர். 


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோ கடந்த 2021-ல் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது எடுக்கப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று ஆ.ராசா பேசியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க