YouTurn

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடிக்கும் வடஇந்தியர்கள் என்று பரவும் தவறான காணொளி!

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடிக்கும் வடஇந்தியர்கள் என்று பரவும் தவறான காணொளி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் 26 மாணவர்கள் காப்பி அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

ஆங்கிலம் சரிவர பேசக் கூட தெரியாத இந்த இந்தி காரனுங்க எப்படி IAS & IPS தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது இந்த நிகழ்வை பார்த்து தெரிந்து கொள்ளலாம். நம் மாநிலத்தில் அதிகார பதவிக்கு இப்படிக்கு குறுக்கு வழியில் தேர்ச்சி பெறும், பான்பராக் அதிகாரிகளை அனுப்பி இலகுவாக இந்த சங்கிகள் போட நினைக்கும் சட்டங்களை கொள்ளை புறமாக திணிக்க இந்த ஏற்பாடு , இதற்காக நம் மாநில சங்கிகள் முழு ஆதரவு, இவனுக இன்னும் திருந்தலையே கோபால்??


X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஆங்கிலம் சரிவர பேசக் கூட தெரியாத இந்த வடஇந்தியர்கள் எப்படி IAS & IPS தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில், தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் காப்பியடிப்பதை ஒருவர் வீடியோ எடுப்பதையும், அங்கு தேர்வை கண்காணிக்கும் கண்காணிப்பாளர்கள் மத்தியிலேயே மாணவர்கள் பலர் காப்பியடிப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. 




உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு “India Today“ ஊடகப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 


கடந்த 2024 மார்ச் 01 அன்று வெளியிடப்பட்ட இந்த செய்தியில், “உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் 26 மாணவர்கள் காப்பி அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த 26 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் காப்பியடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இந்த சம்பவத்தின் தீவிரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை பிறப்பிக்கத் தூண்டியது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, “Zee News “ ஊடகத்திலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் “உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் தேர்வு விதிகள் அனைத்தும் மீறப்படுவது ஒரு காணொளியில் தெரிகிறது. பாராபங்கியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த காணொளியில், மாணவர்கள் பெருமளவில் ஏமாற்றுவதைக் காணலாம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் படிக்க: குஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் !


முடிவு: 


நம் தேடலில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் 26 மாணவர்கள் காப்பி அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதையும், இதனை வட இந்தியர்கள் UPSC தேர்வில் காப்பி அடிப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.