YouTurn

செந்தாமரையும், சாட்டை துரைமுருகனும் நடனமாடியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

செந்தாமரையும், சாட்டை துரைமுருகனும் நடனமாடியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

செந்தாமரையும், சாட்டை துரைமுருகனும் நடனமாடியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவிய செய்தி

செந்தாமரை & சாட்டை 


 

X Link / Archived Link

விரிவான விளக்கம்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் இணைந்து நடனமாடியதாக வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


 

உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடினோம். அப்போது, Praveen Meppayur என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அந்த பக்கத்தில் ”90’s kid wth 20’s kid” என்கிற தலைப்பில் இந்த நடன வீடியோ கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 2025 அன்று வெளியிடப்பட்டிருந்தது. 

 

மேலும், அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதே போன்று பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததுடன், அவருடைய பயோவில் அவர் நடிகர், நடன கலைஞர், பாடகர் என்றும், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இது குறித்து மேலும் தேடிய போது, அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று பதிவிடப்பட்டு, அதில் தன்னுடைய இந்த வீடியோவிற்கு 11 லட்சம் பார்வைகள் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

 

முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்ககளின் படி, பரவி வரும் வீடியோவில் இருப்பவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரவீன் என்ற நபராகும். இதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் இணைந்து நடனமாடியதாக தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.