YouTurn

சதுரங்கம் விளையாட்டில் முதலமைச்சர் எதிராளியின் காயை நகர்த்தியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

சதுரங்கம் விளையாட்டில் முதலமைச்சர் எதிராளியின் காயை நகர்த்தியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ reverse செய்யப்பட்டுள்ளது. உண்மையான காணொளியில், முதலமைச்சர் கருப்பு நிற சிப்பாயைப் பயன்படுத்தி, வெள்ளி நிற குதிரையை அடிப்பது போல் தான் காட்சி இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

எனக்கு என்ன கலர் பிடிக்குமோ அத தான் நான் மூவ் பண்ணுவன் நீ ஆடு சித்தப்பு உன்ன எவன் கேப்பான்

image.png

Archived Link

விரிவான விளக்கம்

சதுரங்கம் விளையாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருப்பு நிறக் காயை நகர்த்துவதற்குப் பதிலாக, எதிராளியின் வெள்ளை நிற காயை நகர்த்துவதாக வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Mobile Journalist ஊடகப்பக்கத்தில் ”CM MK Stalin Playing Chess” என்று குறிப்பிட்டு 28 ஜூலை 2022 அன்று சென்னையில் நடைபெற்று Chess Olympaid 2022 தொடரை முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடுகளை ஆய்வு செய்த முழு வீடியோவும் பதிவாகியிருந்தது. அதில் சரியாக 3:44 நிமிடத்தில் முதலமைச்சர் கருப்பு  நிற சிப்பாயைப் பயன்படுத்தி, வெள்ளி நிற குதிரையை அடிப்பது போல் தான் காட்சி இடம்பெற்றுள்ளது. இதைவைத்து இந்த வீடியோவை  reverse செய்து எடிட் செய்து பரப்புவது தெரியவந்தது. 


அதே போல் கலைஞர் ஊடகத்திலும், 18 பிப்ரவரி 2026 அன்று விளையாட்டைவிட ஒரு பெரிய Meditation வேறு எதுவுமே இருக்க முடியாது. நமது கவனம் சிதறாமல் இருக்கச் சிறந்த Technique விளையாட்டுதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு என்று குறிப்பிட்டு, இது தொடர்பான புகைப்படக் காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. அதிலும் கருப்பு  நிற சிப்பாயைப் பயன்படுத்திவதை தெளிவாக பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, பரவி வரும் வீடியோ reverse செய்யப்பட்டுள்ளது. உண்மையான காணொளியில், முதலமைச்சர் கருப்பு  நிற சிப்பாயைப் பயன்படுத்தி, வெள்ளி நிற குதிரையை அடிப்பது போல் தான் காட்சி இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க