யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மொத்த வருமானம் ரூ.147 கோடி வருகிறது. ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிப் பத்திரத்தில் ரூ.6 கோடி என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வீடியோ தவறானவை. A2D யூடியூப் பக்கத்தில் உள்ள முழு வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மொத்த வருமானம் ரூ.147 கோடி வருகிறது. ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிப் பத்திரத்தில் ரூ.6 கோடி என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அட வெட்கங்கெட்டவங்களா இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லையுமா அலையனும்😏#DMKFailsTN | @arivalayam pic.twitter.com/i7JSZUCRfp
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ A2D யூடியூப் பக்கத்தில் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிந்தது. அதன்படி அந்த யூடியூப் பக்கத்தில், இது தொடர்பான வீடியோ இருக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”Net worth of CM Candidates Part-2 | என்னது தங்கம் மட்டும் 19kg-aa” என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவாகியிருந்தது. அதில் வீடியோவை ஆய்வு செய்த போது, சரியாக 6:29வது நிமிடத்தில் பரவி வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அந்த முழு வீடியோவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மொத்த வருமானம் ரூ.147 கோடி என்று கூறிவிட்டு, பின்னர் மன்னித்து விடுங்கள் மொத்த வருமானம் ரூ.14 கோடி என்று வருகிறது. தவறாக கூறிவிட்டோம். மேலும் அவர் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிப் பத்திரத்தில் ரூ.6 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் ஏன் வருகிறது என்றால், மனை, குடியிருப்பு போன்ற சொத்து விவரங்களின் மதிப்பில் நாங்கள் தற்போதைய Market Value வைத்து கணக்கிட்டுள்ளோம். அதனால் தான் இந்த வித்தியாசம்” என்றே கூறியுள்ளனர். இந்நிலையில் வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மொத்த வருமானம் ரூ.147 கோடி வருகிறது. ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள உறுதி மொழிப் பத்திரத்தில் ரூ.6 கோடி என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வீடியோ தவறானவை. A2D யூடியூப் பக்கத்தில் உள்ள முழு வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
