YouTurn

CEAT Tyres விளம்பர வீடியோவை 'மும்பையில் வித்தியாசமான காட்சி' என செய்தி வெளியிட்ட தினகரன்!

CEAT Tyres விளம்பர வீடியோவை 'மும்பையில் வித்தியாசமான காட்சி' என செய்தி வெளியிட்ட தினகரன்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி…



X Link | Archive Link

விரிவான விளக்கம்

"மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி" என்று கூறி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் 19 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில் உயரமான ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் அருகில் மொபைல் போன் மற்றும் ஒரு கிரிக்கெட் மட்டை தோன்றுவதையும், அதில் CEAT என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. இதை இளைஞர்கள் சிலர் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்வதையும் பரவி வரும் வீடியோவில் காணமுடிகிறது.

மேலும் இந்த வீடியோவை, சமூக ஊடகங்களில் பலரும் "வித்தியாசமான காட்சி" என்று குறிப்பிட்டு வைரலாகப் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், CEAT_Tyres_India என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ மார்ச் 17, 2024 அன்று பதிவிடப்பட்டிருப்பதை அறிய முடிந்தது.



வீடியோவின் விளக்கத்தில் "இன்றிரவு இறுதிப்போட்டி! Strategic Timeout விளையாட்டின் திருப்புமுனைகளை வரையறுக்கும்" என்று குறிப்பிட்டு, #StrategicTimeout, #CGI ஹேஷ்டேக்குகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன்மூலம் இவை CGI எனப்படும் "Computer-Generated Imagery" என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விளம்பரப்படங்கள் என்பதை அறியமுடிந்தது.

பொதுவாக CGI தொழில்நுட்பம் என்பது VFX தொழில்நுட்பத்தின் ஒரு துணைவகை. இதன் மூலம் அனிமேஷன், 2D மற்றும் 3D காட்சிகளை நிஜ காட்சிகளைப் போன்றே உருவாக்க முடியும். திரைப்படங்கள், மருத்துவம், அறிவியல், பொறியியல், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை, கலை மற்றும் விளம்பரத்துறைகளில் இந்த CGI தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பரவி வரும் வீடியோவும், CGI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளம்பரம்தான் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இதனை தினகரன் ஊடகம் உட்பட, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: பிளாஸ்டிக் முட்டை கோஸ் எனத் தவறாகப் பரவும் விளம்பரத்திற்காகத் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரி !

இதற்கு முன்பும் சில விளம்பரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவின. அப்போதே அது குறித்து ஆய்வுசெய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: விஐபி பேக்ஸ் நிறுவனம் மதமாற்றத்தை ஆதரிக்கும் விளம்பரத்தை வெளியிட்டதாக வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், "மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி" என்று கூறி தினகரன் வெளியிட்டிருந்த வீடியோ CGI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி CEAT Tyres வெளியிட்ட ஒரு விளம்பர வீடியோ என்பது தெளிவாகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க