YouTurn

விசிக கட்சியினர் நேதாஜி சிலையை அவமதித்து வீடியோ எடுத்ததாகப் பரப்பப்படும் பொய்

விசிக கட்சியினர் நேதாஜி சிலையை அவமதித்து வீடியோ எடுத்ததாகப் பரப்பப்படும் பொய்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விசிக கட்சியினர் நம் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை. அவமானப்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக அரசாங்கம் இவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.



Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே வலதுசாரி மற்றும் சாதிய இயக்கங்களால் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள்  தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை விசிக கட்சியினர் அவமானப்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/ramgeecrr/status/1635281325040230400?s=20

Archive link

உண்மை என்ன ? 

விசிக கட்சியினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அவமரியாதை செய்ததாக கூறப்படும் வீடியோவின் உண்மைத்தன்மையை குறித்து ஆராய்ந்த போது, அந்த வீடியோவில் பேசும் நபர் ஹிந்தியில் உரையாடுவதைக்  கேட்க முடிந்தது.

தொழில்நுட்பம் வாயிலான வீடியோவை குறித்த தேடலில், அந்த நிகழ்வு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சார்கண்டா என்னும் பகுதியில் 16 வயது சிறுவன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் நின்று புகைப்பிடித்தும், சிலைக்கு சிகரெட் கொடுப்பது போன்றவும் வீடியோ எடுத்துள்ளார்.



News link 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின் புகார்கள் எழுந்ததால், இந்த நிகழ்வை காட்சிப்படுத்திய மற்றொரு சிறுவன் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் சிலையை அவமதித்தவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ANIக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வு  குறித்து சில ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.



மேலும் படிக்க : திருமாவளவனை தரையில் உட்கார வைத்தாரா ஸ்டாலின் ?| ஃபேஸ்புக் பதிவு.

இதேபோல், எம்பி திருமாவளவனை மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாக எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு :

நம் தேடலில், விசிக கட்சியினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அவமதிப்பதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் சார்கண்டாவில் நடந்தது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க