YouTurn

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை வசதி எனப் பரவும் வாரணாசி தற்காலிக கழிப்பறை ஏற்பாடு வீடியோ !

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை வசதி எனப் பரவும் வாரணாசி தற்காலிக கழிப்பறை ஏற்பாடு வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை.. உ.பி முதல்வருக்கு என தனியாக வெஸ்டர்ன் டாய்லெட்டும் ஒன்று உள்ளது..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வரும் பக்தர்களுக்காக அதிநவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ள கழிப்பறையைப் பாருங்கள் என்று கூறி திறந்தநிலையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கழிவறை ஒவ்வொன்றிலும் குழாய்கள் இணைக்கப்பட்டிருப்பதையும், கழிப்பறைகள் அனைத்தும் குறைவான இடைவெளிகளுடன் பொருத்தப்பட்டு அவை திறந்தநிலையிலேயே விடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.



பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் கொண்ட முழு வீடியோ, AMT YOUTUBER என்ற யூடியூப் பக்கத்தில் "ஸ்வர்வேட் மஹாமந்திர் தாம் வாரணாசி! 'ஸ்வர்வேத மஹாமந்திர் தாம்' திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது" என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 11 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.



இதன் மூலம் இந்த கழிப்பறைகள் வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹாமந்திர் தாம் கோவிலின் திறப்புவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இதற்கு முன்பே நமது யூடர்ன் பக்கத்தில், இதே போன்று மக்கள் அதிகம் திரளும் இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக கழிப்பறைகள் தார்ப்பாயை பயன்படுத்தி மறைக்கப்பட்டிருப்பது குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். இரண்டு புகைப்படங்களையும் ஒப்பீடு செய்து பார்த்ததில், வாரணாசியில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கழிப்பறைகள் தான் என்பதையும், இவை தார்ப்பாய் பயன்படுத்தி மறைக்கப்படுவதற்கு முன்பே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.



மேலும் படிக்க: “அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் !

மேலும் படிக்க: எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி!

முடிவு:

நம் தேடலில், அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பதையும், இந்த தற்காலிக கழிப்பறைகளை தார்பாய் மூலம் மறைத்து ஏற்பாடு செய்வதற்கு முன்பே வீடியோ எடுத்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க