யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
வி.பி.சிங் காலத்தை மட்டும் முதல்வர் சொல்ராறு என்பதை நண்பர்கள் கவனிக்கனும். எங்களை பத்தி வாஜ்பாய் பத்தி கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியது, தமிழகம் வாஜ்பாய் அவர்களின் மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்களுடைய இரங்கல் தீர்மானம் வேணா தரேன், தமிழகம் வந்து ஒரு அருமையான தோழனை இழந்துவிட்டதாக அவர் சொன்னார் - பாஜக ஷெல்வீ 

விரிவான விளக்கம்
சன் நியூஸ் தொலைக்காட்சியில் (27.11.2023) "VP Singh சிலை திறப்பு விழாவில் CM Stalin பேச்சு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவா? " எனும் தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத்தலைவர் ஷெல்வீ பேசுகையில், வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் இரங்கல் தீர்மானம் கொண்டுவந்தார் என (10.30 நிமிடத்தில்) பேசி இருந்தார்.
உண்மை என்ன ?
முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ஆனால், கலைஞர் கருணாநிதி அவர்கள் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியே சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். வாஜ்பாய் அவர்கள் இறப்பதற்கு முன்பே கலைஞர் உயிரிழந்து விட்டார். ஆனால், கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்ததாகத் தவறான தகவலை பேசி உள்ளார்.
மேலும், வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு திமுக சார்பில் இரங்கல் தீர்மானம் ஏதேனும் வெளியிட்டு இருக்கிறதா என்று தேடுகையில், 2018 ஆகஸ்ட் 28ம் தேதி திமுகவின் தீர்மானம் குறித்து இந்து தமிழ்திசை இணையதளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில், தீர்மானம் இரண்டு என்ற தலைப்பில் கூறியதாவது: கருணாநிதியின் பார்வையில் வல்லவராகவும், நல்லவராகவும், மூன்று முறை இந்திய பிரதமராகவும், கருணாநிதி பெரிதும் சுட்டி காட்டிய தமிழக உரிமைகளைத் தவறாமல் நிலைநாட்டியவராகவும், இந்தியாவை அடுத்த உயரத்திற்கு முன்னேற்றிட தங்க நாற்கர சாலை போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவராகவும் திகழும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16.8.2018 அன்று காலமானார் என துயரச் செய்தியினை, இந்த பொதுக்குழு மிகுந்த வருத்ததுடன் பதிவு செய்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.
நாட்டின் பன்முக தன்மையை காப்பாற்றுவதற்காக, பிரதமர் பதவியிலிருந்த போதும் அதற்கு முன்னரும் உணர்வுப்பூர்வமாகப் பாடுபட்ட வாஜ்பாய், அண்ணாவுடனும், கருணாநிதியுடனும் நெருங்கிய நட்பைப் போற்றிய தேசியத் தலைவர். வளமான கற்பனை செறிந்த கவிஞர், நிறைவான நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர். ஆட்சியில் இருப்போர் மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற பண்பட்ட எண்ணம் கொண்டவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்த்தவர், கார்கில் கதாநாயகர், வெற்றிகரமான பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வல்லரசுகளை திரும்பி பார்க்க வைத்த பிரதமர் என்று பல்வேறு அருமை பெருமைகளுக்குச் சொந்தகாரரான வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இந்த பொதுகுழு மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. "என்று கூறப்பட்டுள்ளது.
வாஜ்பாய் அவர்களுக்கும்,கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது. இதன் அடிப்படையில், வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத்தலைவர் ஷெல்வீ, வாஜ்பாய் மறைவிற்கு கலைஞர் இரங்கல் தீர்மானம் வெளியிட்டதாகக் கூறிய தகவல் உண்மை அல்ல. வாஜ்பாய் இறப்பதற்கு முன்பே கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்து விட்டார்.