யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் அமையவிருந்த ‘நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்கள் கையில் இருந்த கொடியில் தமிழ் மன்னர்களாக மூவேந்தர்களின் சின்னமான மீன், வில், புலி ஆகியவற்றை உள்ளடக்கிய கொடிதான் இருந்தது. அந்தக் கொடியை Edit செய்து ’பன்றிக் கொடியை’ வைத்திருந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பன்றிக் கொடியை வைத்திருந்தப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இவர்கள் ஏன் பன்றிக் கொடியை கையில் வைத்திருக்கிறார்கள் 🤷♂️ pic.twitter.com/qF3GsBRDsO
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது behindwoods. com இணையதளப்பக்கத்தில் ”MK STALIN FLAGS OFF VAIKO'S RALLY AGAINST NEUTRINO IMAGES” என்ற தலைப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் பரவி வரும் புகைப்படம், முதல் புகைப்படமாக இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து இந்த செய்தி குறித்து கூகுளில் தேடி பார்த்தோம். தி ஹிந்து ஊடகத்தில் மார்ச் 31, 2018 அன்று” Vaiko begins padayatra against INO project” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் தேனி மாவட்டத்தில் அமையவிருந்த ‘நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடை பயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் கையில் இருந்த கொடியில் தமிழ் மன்னர்களாக மூவேந்தர்களின் சின்னமான மீன், வில், புலி ஆகியவற்றை உள்ளடக்கிய கொடிதான் இருந்தது. அந்தக் கொடியை Edit செய்து ’பன்றிக் கொடியை’ வைத்திருந்ததாக தவறாக பரப்புகின்றனர்.

இதே போல் BBC தமிழ், தி ஹிந்து தமிழ் போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.

முடிவு :
நம் தேடலில், நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் மேற்கொண்ட போது, அவரது கையிலிருந்த மூவேந்தர்கள் கொடியை Edit செய்து ’பன்றிக் கொடியை’ வைத்திருப்பதாக தவறாக பரப்புவது தெரியவந்தது.
