YouTurn

முஸ்லிமாக மதம் மாறிய இந்துகள் மோதிக்கொள்ளும் காட்சி எனப்பரவும் உத்தரப் பிரதேச வீடியோ!

முஸ்லிமாக மதம் மாறிய இந்துகள் மோதிக்கொள்ளும் காட்சி எனப்பரவும் உத்தரப் பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்.

பரவிய செய்தி

அரே பில்லா...

துலுக்கத்துக்கு வந்த  சோதனை...

இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா சொன்னதை நம்பி மதம் மாறிய தலித்துகள்  கீழ்ஜாதி மேல்ஜாதி என் அடித்துக்கொள்ளும் அற்புதமான தலித் முசுலீம் ஜாதி சண்டையை பாரீர்…


image.png


X Link

விரிவான விளக்கம்

மசூதியில் முஸ்லிம்கள் சிலர் ஒருவரை ஒருவர் தடி மற்றும் பெல்டை கொண்டு மாறி மாறித் தாக்கிக்கொள்ளும் 1 நிமிடம் 23 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளப்பக்கங்களில் பரவி வருகிறது.




உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.


உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய aajtak.in  இணையதளப்பக்கத்தில் செப்டம்பர் 3, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில் பரவக்கூடிய வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று உள்ளடங்கி இருப்பதை கவனிக்க முடிகிறது.  


image.png


அதில், உத்தரப் பிரதேசம் மொராதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் எனக் குறிப்பிட்டிருந்தது.


மேலும் அதில் , இந்த சம்பவம் குறித்து எஸ்பி சிட்டி ரன்விஜய் சிங் "இது பாக்பாடா காவல் நிலைய பகுதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் இது. முதலில் குழந்தைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது, பின்னர்  இருதரப்பு சமூகத்தினரும் அதில் ஈடுபட்டனர். இதில், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், IndiaTV என்ற யூடியூப்பக்கத்தில் செப்டம்பர் 5,2024 அன்று மொராதாபாத் மசூதியில் 'கேங் வார்'. என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவு செய்திருப்பதை பார்க்க முடிகிறது.  அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள அதே தகவல்தான் உள்ளது.




இவற்றிலிருந்து இந்த சம்பவம் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதல் என்பது தெளிவாகிறது. இதனைச் சிலர் முழுக்க முழுக்க மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பரப்பி வருகின்றனர்.


முடிவு:


நம் தேடலில், இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என்பது தெளிவாகிறது.  உத்தரப் பிரதேசம் மொராதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் என்பதை அறியமுகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க