YouTurn

உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !

உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

என்னா அடி! இது? பாத் ரூமில் வழுக்கி விழும் காட்சியை பார்க்கனுமே!



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டைச் சித்திரவதை செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்து கடுமையாகத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/Suresh33737771/status/1637442374879309829

Archive link 

மேலும், பசு மாட்டைத் தாக்கிய நபர் “பசுமாட்டை கொல்லுவேண்டா, திம்பேண்டா, உரிமைடா, யாராலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா" எனப் பேசியதாகவும் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

காவலர்கள் தாக்கும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடிய போது, அந்நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலம், சந்தெளலி மாவட்டத்திலுள்ள மத்தெலா என்னும் கிராமத்தில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிந்தது. 

[caption id="attachment_40323" align="aligncenter" width="556"] கூகுள் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[/caption]

Archive link 

2021, மே மாதம் உள்ளூரில் உள்ள செல்போன் கடையில் திருடியதாக மூன்று சிறுவர்களைக் காவல் துறையினர் பிடித்துள்ளனர். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து சில இந்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

[caption id="attachment_40326" align="aligncenter" width="572"] கூகுள் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[/caption]

Archive link 

அச்சிறுவர்களை மிகக் கடுமையாகத் தாக்கிய காவலரை சஸ்பெண்ட் செய்ததோடு, சந்தெளலி காவல் துறையின் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த வீடியோ 2022, மார்ச் மாதம், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பிய நபரை காவல்துறையினர் பிடித்து 'டீல்' செய்த விதம் எனப் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து சந்தெளலி காவல்துறை அப்போதே விளக்கம் அளித்திருந்தது. வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதற்காகச் சிலர் இந்த வீடியோவை தவறாகப் பரப்பியிருந்தனர்.

https://twitter.com/chandaulipolice/status/1505365340028497920

Archive link 

இதிலிருந்து காவல் துறையினர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மத்தெலா என்னும் கிராமத்தில் செல்போன் கடையில் திருடிய சிறுவன் மீது நிகழ்த்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது. ஆனால், இளைஞர் ஒருவர் மாட்டின் கழுத்தைப் பிடித்து சித்ரவதை செய்யும் வீடியோ குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

முடிவு : 

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் பசு மாட்டை தாக்கியவரைக் காவல் துறையினரால் தண்டிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. அது செல்போன் கடையில் திருடிய சிறுவனைக் காவல் துறையினர் தக்கிய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க