யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்’ என்று ஆங்கிலத்தில் கூறியது தெளிவாக பதிவாகியுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில், “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திருவல்லிக்கேனி, லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற்கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர் சந்தித்த துணை முதலமைச்சர், ஆங்கலத்தில் பதிலளித்துள்ளார். அந்த வீடியோவை எடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது என்று பரப்புகின்றனர்.
இது ஸ்டாலின் இரத்தம் இங்கிலீஸ் தெரியாது😂😂😂#DMK_FailsTN @AIADMKITWINGOFL @AIADMKOfficial @satyenaiadmk pic.twitter.com/qi5GBZSwUj
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஏப்ரல் 3ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி, பாலிமர் செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பார்க்க முடிந்தது. 11.14 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், உதயநிதி ஆங்கலத்தில் பேசி உள்ளாரா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது சரியாக 41 நொடியில் பரவி வரும் வீடியோவில் உள்ள வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதில் வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்கும் போது, ‘நாங்கள் இதை (வக்ஃப் திருத்தச் சட்டத்தை) எதிர்க்கிறோம். தொடர்ந்து எதிர்ப்போம். இந்த சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்’ என்று ஆங்கிலத்தில் கூறியது தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் உறுதி செய்வதற்காக தேடி பார்த்த போது, Newstamil 24x7 செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து வீடியோ இடம்பெற்றிருந்தது. அதிலும் சரியாக 45 நொடியில் உதயநிதி ஆங்கலத்தில் பேசியது தெளிவாக புரிந்தது.
மேலும் ETV Bharat Tamil Nadu செய்தி ஊடகத்தின் இணையதள பக்கத்திலும், “கச்சத்தீவு மீட்பு, வக்ஃப் மசோதா எதிர்ப்பு குறித்து பிரதமரைச் சந்தித்துப் பேசுவோம்”- துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி! - UDHAYANIDHI ABOUT PM VISIT என்ற தலைப்பில், இது குறித்த செய்தியும் வெளியாகியிருந்தது.

முடிவு :
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்று பரப்பப்படும் இந்த வீடியோ Edit செய்யப்பட்டதாகும்.
