YouTurn

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு தொடர்வதாக டைம்ஸ் நவ் வெளியிட்ட பொய் செய்தி !

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு தொடர்வதாக டைம்ஸ் நவ் வெளியிட்ட பொய் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உதயநிதி பதவியிழக்க போவது உறுதி. உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார்.

X post link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசியது நாடு முழுவதிலும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகளை பெற்றது. இதற்கிடையில், உத்தரப் பிரதேச சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அளிப்பதாக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன பேச்சிற்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக வந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக டைம்ஸ் நவ் செய்தியின் கார்டு ஒன்று பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இந்து மக்கள் கட்சியின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்திலும் பதிவிடப்பட்டு இருக்கிறது.






Archive link 



உண்மை என்ன ? 

வைரலாகும் டைம்ஸ் நவ் செய்தியை பகிர்ந்த தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த செல்வகுமார், இப்பதிவை டைம்ஸ் நவ் சேனலின் யூடியூப் பக்கத்தில் இருந்து எடுத்ததாக மற்றொரு படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். 

ஆனால், இதுகுறித்து டைம்ஸ் நவ் சேனலில் தேடுகையில், " Udhayanidhi stalin Row News Live " Sanatan Slandering Showdown | Supreme court " என்ற தலைப்பில் உள்ள வீடியோ இடம்பெறவில்லை.



Archive link

மேற்கொண்டு தேடுகையில், டைம்ஸ் நவ் யூடியூப் சேனலில், " உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார் என்ற தவறான செய்தியை டைம்ஸ் நவ் வெளியிட்டது. அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டு உள்ளது. தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் " என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

உதயநிதியின் பேச்சுக்கு எதிரான வழக்குகள் குறித்து தேடுகையில், பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளதாக Live Law இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அதேபோல், உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் ம்மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர் என தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.

உதயநிதியின் பேச்சுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பான செய்திக்கு தலைமை நீதிபதியே நடவடிக்கை எடுக்க உள்ளதாக தவறான செய்தியை டைம்ஸ் நவ் பரப்பி உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார் என்ற பரவும் டைம்ஸ் நவ் செய்தி தவறானது. அந்த செய்தியை அவர்கள் நீக்கி விட்டு, மன்னிப்பும் கேட்டு உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க