
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
@Srividhya_Hari.
டம்மி அண்ணாமலைக்காக கோவையில் டம்மி வேட்பாளரை போடுவதற்காக பேக்கரி டீலிங் நடந்த போது pic.twitter.com/7EgEbGp9nY
— veangai Vinoth (@VeangaiVinoth) March 26, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதையும், கடந்த 2022 இல் இருந்தே சமூக ஊடகங்களில் இது வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
மகாராட்டிரத்தில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்த சில நாட்களில், தமிழகத்திலும் அது போல் நடைபெறுமா என்று கேள்விகள் முணுமுணுக்கும் வேளையில், முதலமைச்சர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி தமிழக பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு. pic.twitter.com/5JXxMcT9t3
— கார்த்திகைச்செல்வன் (@Kaarthikaichelv) July 15, 2022
கடந்த 2022 ஜூலை 15 அன்று ABP Live தமிழ்நாடு, "”அப்பா எப்படி இருக்காரு?”: முதல்வர் உடல்நலன் குறித்து உதயநிதியிடம் நலம் விசாரித்த அண்ணாமலை..!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்துள்ளார். இருவரும் அஞ்சலி செலுத்தியபின், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டுள்ளனர். அப்பொழுது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று IBC Tamilnadu பக்கத்திலும், கடந்த 2022 இல் இதே செய்தி குறிப்பிடப்பட்டு "உதயநிதி ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு..!" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பரவி வரும் புகைப்படம், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரான ஐசரி கணேஷின் தாயார் மறைவையடுத்து, அவரது வீட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சந்தித்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் பரவும் பொய் !
முடிவு:
நம் தேடலில், மக்களவை தேர்தலுக்காக அண்ணாமலையை சந்தித்த உதயநிதி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.