யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகள் அளித்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பரவிய செய்தி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகளை முதல்வர் விஜய் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.


விரிவான விளக்கம்
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு தொடங்கும் முன்பு கேமரா முன்னால் I.G ரம்யா பாரதி உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் சிரித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த மூன்று போலீஸ் அதிகாரிகளை முதல்வர் விஜய் பணியிடை நீக்கம் உத்தரவுவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள் பரப்பப்படுகிறது.
According to reports, Tamil Nadu Chief Minister Vijay reportedly suspended three IPS officers after controversy erupted over their conduct before a media briefing related to a sensitive case involving a young girl. The officers allegedly faced criticism for laughing and engaging… pic.twitter.com/zQDwahbigp

உண்மை என்ன?
சமீபத்தில் தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். கடந்த மே 17ஆம் தேதியன்று ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், மதுரையைச் சேர்ந்த வெள்ளைக் காளை என்ற ரௌடியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகளை காவலர்கள் அளித்ததாகவும், இதன் காரணமாக மாரிமுத்து என்ற காவல் ஆய்வாளரும் செல்லத்துறை, திருமுருகன் ஆகிய காவலர்கள் உட்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிரித்தது தொடர்பான விவகாரத்தில் இந்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகள் அளித்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை திரித்து செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.