YouTurn

தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை பிரச்சாரம் செய்ததா? தவெகவினர் பரப்பும் பொய் செய்தி!

தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை பிரச்சாரம் செய்ததா? தவெகவினர் பரப்பும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படத்தில் உள்ள சின்னம் விசில் சின்னம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் Logo ஆகும்.

பரவிய செய்தி

என்ன விசிலுக்கு தேர்தல் ஆணையமே ஓட்டு கேட்குது 


image.png


Link / Archive Link


விரிவான விளக்கம்

மனிதர்கள் கூடி நின்று குறிப்பிட்ட ஏதேனும் உருவமாக நிற்கும்  ’Human Formation’ ஒன்றின் புகைப்படத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த ’Human Formation’  விசில் சின்னம் போல் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமே தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பிரச்சாரம் செய்வதாகவும் தவெக ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 



உண்மை என்ன?


இந்த புகைப்படத்தை ’Reverse Image Search’ மூலமாக இணையத்தில் தேடியபோது, ’தமிழ்நாடு முதன்மை தேர்தல் அதிகாரி’யின் அதிகாரப்பூர்வ இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது. 



தேர்தல் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், வருகின்றன 2026 சட்டமன்றத்தில் தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவு என்ற இலக்கை முன்வைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பாக இந்த ’Human Formation’ நிகழ்த்தப்பட்டுள்ளது. 


மேலும் இது குறித்து ‘Chennai Online’ என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என 8,662 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்கள் பல்வேறு சின்னங்களில் ஒழுங்கமைத்து நின்று தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், இந்த புகைப்படத்தில் உள்ள சின்னம் விசில் சின்னம் இல்லை. அது தேர்தல் ஆணையத்தின் Logo ஆகும். மயிலாடுதுறை, விழுப்புரம் போன்ற  இடங்களிலும் இவ்வாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முடிவு:


தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தின் Logo வடிவில் ’Human Formation’ நிகழ்த்தப்பட்டதை, தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை பிரச்சாரம் செய்வதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க