YouTurn

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டாரா உதயநிதி? உண்மை என்ன?

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டாரா  உதயநிதி? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரம் செல்வதற்கு முன்பு அவருடைய வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றுவிட்டு தான் பிரச்சாரம் தொடங்கினேன்” என்றே கூறியுள்ளார். இதைத் திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

தளபதி @actorvijay அவர்களின் ஆசீர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்ட சின்னவர். 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டார்  உதயநிதி ஸ்டாலின் என்று அவர் அளித்த நேர்காணால் ஒன்றின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த வீடியோவில் சன் நியூஸ் லோகோவும், கழகத் தலைவன் படத்தின் போஸ்டரும் இடம்பெற்றிருந்தது. இதைவைத்துக் கொண்டு சன் நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், அந்த நேர்காணால் குறித்து தேடினோம். அப்போது "விஜய் சார்-ஐ கடைசியா மீட் பண்ணப்போ அவர் என்கிட்ட சொன்னது இதுதான் - உதயநிதி ஸ்டாலின்” என்ற தலைப்பில், நவம்பர் 10, 2022 அன்று 19:47 நிமிடங்கள் கொண்ட முழு நேர்காணல் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 


அந்த நேர்காணலை முழுமையாக பார்த்த போது, சரியாக 17:30 நிமிடத்தில் பரவி வரும் வீடியோ கிளிப் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் “தேர்தல் பிரச்சாரம் செல்வதற்கு முன்பு அவருடைய வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றுவிட்டு தான் பிரச்சாரம் தொடங்கினேன்” என்றே அவர் கூறியுள்ளார். 


முடிவு: 

நம் தேடலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரம் செல்வதற்கு முன்பு அவருடைய வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளை பெற்றுவிட்டு தான் பிரச்சாரம் தொடங்கினேன்” என்றே நேர்காணலில் கூறியுள்ளார். இதை விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டார்  உதயநிதி ஸ்டாலின் என்று திரித்து பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க